பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கற்பனைச்சித்திரம் "சரி! நான் ஆறுமணிக்கு ஆலயம் வத்துவிடுகிறேன்" என்று கூறினார் புலவர், சீக்கிரமாக இவன் தொலைந்தால் தாளே சிலப்பதிகாரத்தைத் தேடி எடுக்கலாம் என்ற சிந்தனையுடன் ஜெமீன்தார், ஏற்பாடுகளிலே செய்தமாறு தலைச் சொன்னேனே தவிர, முக்கியமான மாறுதலைச் சொல்ல மறந்துவிட்டேனே. பிரசங்க தேதியை மாற்றி, விட்டார். அடுத்த வெள்ளிக்கிழமைதான், இந்த வைபவர்" என்று ஐயர் கூறினார். பிரசங்கபூஷணர், பேசவும் முடியாத சோகமுற்றார். காலைமுதல் எவ்வளவு கஷ்டம்! சிந்தனை! தயாரிப்பு! கடை சியில் பிரசங்கம் இன்று இல்லை என்று எவ்வளவு சுலபத்தில் சொல்லி விட்டார்கள்– என்று சோகமுற்றார். ஐயர் விடைபெற்றுக்கொண்டு போனார். புலவர், ஏடு எழுதுபவனை வீடு ஏகச்சொல்லி வீட்டு அதுவரையிலே தயாரித்த அரிய சொற்பொழிவைப் படித்துப் படித்து ரரித்தார். வேறென்ன செய்வார். பாபம்! சீடன் ஓடோடி வத்தான் அதே நேரத்தில். " மறந்தே போனேன்! நீங்களும் மறந்து போனீர்களே ! அடுத்த வெள்ளிக்கிழமை, புன்னைவனநாதர் கோயிலிலே ஓர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடாகி இருக்கிறதே. இங்கும் அதே கிழமையிலே எப்படி நடத்துவது என்று கேட்டான். '" என்ன தம்பி! இதுவா பிரமாதம். ஒரே நாளிலே இரண்டு சொற்பொழிவுகள் நடத்தவாமுடியாது. பிரசங்க பூஷணம் என்ற பெயர் என்ன அர்த்தமற்றதர பைத்தியக் காரப்பிள்ளை) புன்னைவன நாதர்கோயில் இங்கிருந்து மூன்று கல் தொலைவு. மாலை மூன்றுக்கு அங்கே பேசுவது. இங்கே 6-மணிக்கு மேல்தானே ஆரம்பம். ஒரு பேச்சுச் சொல்லி அனுப்பினார் ஜெமீன்தார் தமது பெட்டி வண் டியை அனுப்பிவைக்கிறார்" என்று புலவர் கூறினார். "சரிதான்! எதற்கும் தங்களுக்குக் கவனப்படுத்தலாம். என்று வந்தேள் " என்று கூறினான் சீடன்.