பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூபதியின் ஒருநாள் அலுவல் குறைவாக, மட்டமாக வாழ்க்கையை நடத்தக்கூடாது. மதிக்கமாட்டார்களே ஜனங்கள்! "என்னடா மகாபிர மாதம்! அவன் பெரிய ஆசாமியின் மகன் என்று சொல்லு கிறாய், அவனுந்தான் '555' பிடிக்கிறான். நம்முடையதும், அதே ரகச் சிகரட்தான்' என்று அன்று 'ஒரு நாள் அப்ரகாம் சொன்னான், எனக்கு வெட்கமாகத்தான் இருந் தது. எவ்வளவு செலவு செய்தாலும் உனக்குத் தகும்". செல்வவான்களின் செருக்கு, அவர்களையே அழிக்கும் நெருப்பாக மாறும். ஆகவே அவர்கள் உள்ளத்திலே அந்த நெருப்புக் குறையாதபடி நாம் அடிக்கடி தூண்டி விட்டுக்கொண்டே இருக்கவேண்டும்; அதிகமாகச்செலவு செய்கிறோம், அனாவசியமாகச் செலவு செய்கிறோம் என்ற எண்ணமே, அந்தச் சீமானுக்குத் தோன்றக்கூடாது. எவ்வளவு செலவு செய்தாலும் கெடுதி இல்லை, தகும். மேலும் அப்படிச் செலவு செய்வதுதான் நமது அந்தஸ்த் துக்கு ஏற்றது. ஜனங்கள் அப்போதுதான் நம்மைக் கண்டால் மதிப்பார்கள். செலவிலே சுருக்க ஆரம்பித்தால் கேவலமாக நினைத்துவிடுவார்கள் என்ற இப்படிப்பட்ட எண்ணம், சீமானின் மனதிலே முளைத்தபடி இருக்க வேண்டும், அந்தப் பயிர் செழிப்பாக இருக்க முகஸ்துதி என்ற தண்ணீரை தாம் பாய்ச்சியபடி இருக்கவேண்டும் என்ற தத்துவம், கோடீஸ்வரனுக்குப் பெயர் கோடீஸ் வரன், நிலைமை மகாமோசம், ஆசாமியோ பலே பேர்வழி. மரத்திலேதான் பழம் இருக்கும். நாம் நடந்து செல்லும் பாதையிலேயா இருக்கும்? பாதையிலே, முள்ளும் கல்லும் தான் இருக்கும். நமக்கு இந்தக் கல்தான் கிடைக்கும். கனி தோட்டக்காரனுக்குத்தானே கிடைக்கும். நாம் பாட் டையிலே போகவேண்டியவரானோம் என்று சொல்பவன் பைத்தியக்காரன், கிடைக்கிற கல்லை எடுத்துத் தொலை விலே தொங்கும் பழத்தை நோக்கி வீசினால் பழம் கீழே விழுகிறது. கல்லை விட்டுவிடு, கனியை எடு. சாப்பிடு! இதுதானே புத்திசாலி செய்யவேண்டிய காரியம்? பாதை யிலே நடந்துகொண்டே, காலிலே கல் தடுக்கினால் கஷ்டப்