பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைச்சித்திரம் பட்டு, அதே நேரத்திலே, மேலே அண்ணாந்து பார்க்கும் போது, மரத்திலே கனி குலுங்கக் கண்டு ஏக்கமடைந்து கிடப்பவன் ஏமாளி. மேலே பழம், கூன் காலடியிலே கல்! கைக்கும் கருத்துக்கும் கொஞ்சம் வேலை கொடு, கனி பிறகு உனக்குத்தான். மரத்துக்கா, தோட்டக்காரனுக்கா?- இந்தத் தர்க்கம் செய்பவன் கோடீஸ்வரன். பணம், பணக் காரனிடம் இருக்கிறது. மரத்திலே பழம் இருப்பதுபோல! ஏழையிடம் பணம் இல்லை. ஆனால் பணக்காரனிடம் உள்ள பணத்தைப் பறிக்கும் 'வித்தை' கூடவா இல்லை.அவன் மூளைக்குக் கொஞ்சம் வேலை கொடுத்தால்தானே என்பான் கோடீஸ்வரன். அந்த முறையிலே சீமான்களின் தோழனா இருந்தான், இலாபத்துடன். சீமான்களின் மனது குளி ரும்படி பேசுவான், கெஞ்சுவஜுல்லை ; பணம் ஒரு பிரமாதமா என்று சொல்வான். சீமால் எவ்வளவு செலவு செய்தாலும் இது என்ன சாதாரணச் செலவுதான் என்று கூறுவான். வேறு பல சீமான்களின் நடைநொடி பாவனைகளைத் தன் வலையில் வீழ்ந்த சீமான் மு புகழ்ந்து பேசுவான். அதன் மூலம் தன் நண்பனான சீமானின் மனதிலே, "ரோஷ" உணர்ச்சி உண்டாகச்செய்வான், அந்த ரோஷ்உணர்ச்சி ஷெவர்லே காராகக் காட்சி அளிக்கும், ட்வீட் சூட்டாகத் தோற்றமளிக்கும். உயர்தரமான ஓட்டல்களுக்கு இழுத்துச் செல்லும் சினிமா நாடகங்களிலே, சோபாவிலே கொண்டு போய் உட்காரவைக்கும்! அதிகமாக அவசியமற்ற செலவு செய்து வருகிறோம் என்று பூபதி கொஞ்சம் கவலைப்பட்ட போது, 'ரோஷ்" உணர்ச்சி ஊட்டுவதற்கு. உபயோ கித்த உபதேசம் மேலே குறிப்பிடப்பட்டது. அந்தப் பேச் சின் பயனாகப் பூபதிதான் உண்மையிலேயே தன் அந்தஸ்த் துக்கு ஏற்றபடி செலவு செய்யவில்லை என்று எண்ணவும், கொஞ்சம் வெட்கப்படவும் கூட நேரிட்டது. கோடீஸ்வரன். பூபதியின் ரோஷ உணர்ச்சியை அவ்வளவு சாமர்த்திய மாகக் கிளறி விட்டான், அதன்பலன், அன்று ரமாமணி வீட்டிலே ரசமான விருந்து பூபதிக்கு! கோடீஸ்வரனிடம் கொஞ்சிக்கொண்டிருந்தாள். கோகிலா, ரமாமணியின் தங்கை. 'உங்களுக்கென்ன குறைச்சல்! மிட்டாதாரர்தான்