பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருணாகரத் தொண்டைமான்

125

கல்வெட்டுப் பரிசோதகரும் இம் முடிவை ஒத்துக் கொண்டுள்ளனர்.

கலிங்கத்துப்பரணிப் பிரதிகளிலும், தண்டியலங்கார மேற்கோள்களிலும் கலிங்கப் போரையும் கருணாகரனையும் பற்றிக் காணப்பெறும் ஒரு சில பழம் பாடல்களை ஈண்டு கூறுதல் ஏற்புடைத்து.

தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில் விடங்குலவு வெள்வாள் விதிர்ப்பு-நடுங்கியதே கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ
வாண்மே வியகலிங்கர் மண்.[1]

சரநிரைத் தாலன்ன தண்பனி
தூங்கத் தலைமிசைச்செங்
கரநிரைத் தாரையுங் காண்பன்கொ
லோகலிங் கத்துவெம்போர்
பொரநிரைத் தார்விட்ட வேழமெல்
லாம்பொன்னி நாட்டளவும்
வசநிரைத் தான்றொண்டை மான்வண்டை
மாநகர் மன்னவனே.

இப்பாடல்கள் இரண்டும் சென்னை 'மியூசியம்’ கையெழுத்துப் புத்தக சாலையிலும், தஞ்சைச் சரசுவதி மாலிலும் உள்ள பரணிப் பிரதிகளின் இறுதியிற் கண்டதாக திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.[2]

கரடத்தான் மாரியுங் கண்ணால் வெயிலும்
நிரைவயிரக் கோட்டா னிலவுஞ்-சொரியுமால்
நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்.[3]


  1. 'மன்' என்றும் பாடம்.
  2. ஆராய்ச்சித் தொகுதி-பக். 445
  3. தண்டி-கருவிக் காரக ஏதுவணியின் மேற்கோள்.