பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தென்தமிழ் தெய்வப் பரணி

13


வண்புகழ் உரைத்தல் எண்புறத் திணை யுற
வீட்டல் அடுகளம் வேட்டல்[1]

என்ற இலக்கண விளக்கச் சூத்திரப்பகுதியாலும்,

தேவர் வாழ்த்தே கடைநிலை பாலை
மேவி அமரும் காளி கோயில்
கன்னியை ஏத்தல் அலகை விநோதம்
கனாநிலை நிமித்தம் பசியே ஒகை
பெருந்தேவி பீடம் அழகுற இருக்க
அமர்நிலை நிமித்தம் அவள்பதம் பழிச்சா
மன்னவன் வாகை மலையும் அளவு
மரபினி துரைத்தல் மறக்களம் காண்டல்
செருமிகு களத்திடை அடுகூழ் வார்த்தல்
பரவுதல் இன்ன வருவன பிறவும்
தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே.[2]

என்ற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தாலும் அறியலாம். இதனைத் தேவ பாணியில் அடக்குவர் பேராசிரியர் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர். "பரணியுள் புறத்தினை பலவும் விராய் வருதலின் அது தேவ பாணியாம் என்றது என்னையெனின் அவையெல்லாம் காடு கெழு செல்விக்குப் பரணிநாட் கூழுந்துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர், வழக்குபற்றி, அதனுட் பாட்டு டைத் தலைவனைப் பெய்து சொல்லப்படுவன ஆதலால் அவை யெல்லாவற்றானும் தேவபாணியாம்” என்பது அவர் உரையாகும்.[3] நச்சினார்க்கினியரும் அதே சூத்திரத்திற்கு உரையெழுதுங்கால், "பரணியாவது-காடு கெழு செல்விக்குப் பரணிநாட் கூழுந் துணங்கையும் கொடுத்து வழி படுவதோர்


  1. இலக்கண விள-சூத்
  2. பன்னிருபாட்-சூத். 58
  3. தொல்-பொருள்-செய்யுளி-சூ 149-ன் உரை.