பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்

53


கின்றன; சில குலோத்துங்கனின் வெற்றியைப் பாடி கைவீசி ஆடுகின்றன; சில யானைகளின் வயிறுகளில் புகுந்தும், இரத்த வெள்ளத்தில் விழுந்தும், விளையாடுகின்றன; சில தரையில் வீழ்ந்து புரண்டும் தலைவிரி கோலமாய் ஓடியும் ஆடுகின்றன. சில பேய்கள்,

பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
    பொருநைக் கரையனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே
    கங்கை மணாளனை வாழ்த்தினவே[1]

[பொன்னி-காவிரி; பொருநை - தாமிரவரணி; கன்னி

கன்னியாகுமரி; கங்கை-கங்கையாறு]

எல்லாப் பேய்களும்,

யாவ ருங்களிசி றக்கவே; தருமம்
    எங்கு மென்றுமுள தாகவே;
தேவ ரின்னருள்த ழைக்க வே;முனிவர்
    செய்த வப்பயன்விளைக்கவே;[2]

வேத நன்னெறி பரக்க வேயபயன்
   வென்ற வெங்கலிக ரக்கவே;
பூத லம்புகழ்ப ரக்க வேபுவிதி
    லைக்க வேபுயல்சு ரக்கவே [3]

என்று சொல்லி வாழ்த்துகின்றன.

இவ்வாறு, சயங்கொண்டார் தன் கற்பனை ஆற்றலால் புதியதோர் பேய்கள் உலகத்தைப் படைத்துக் காட்டுகிறார். கவிஞர் மனித உலகை


  1. தாழிசை 592.
  2. தாழிசை 595.
  3. தாழிசை-596