பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரலாற்றுக் கருவூலம்

67


தலும் அக்கால இயல்பாக இருந்தது. வெற்றி கொண்ட அரசர் தாம் வென்ற இடத்தில் வெற்றித் தூண் நாட்டலும் அக்கால வழக்கமாகும். கலிங்க நாட்டில் கருணாகரன் இவ்வாறு செய்தமை,

கடற்கலிங்கம் எறிந்துசயத்
      தம்பம் நாட்டி.[1]

என்ற அடியால் அறியப்படும். குலோத்துங்கனக் குறிக்குமிடத்தும்,

தனித்தனியே திசையான தறிகளாகச்
சயத்தம்பம் பல நாட்டி[2]

என்று கூறுவதாலும் இதனை அறியலாகும்.

சில வழக்காறுகள்

இலக்கியம் 'வாழ்க்கையின் விமர்சனம் ' என்று உரைத்தார் மாத்யூ ஆர்னால்டு என்ற ஆங்கிலத் திறனாய்வாளர். மக்கள் வாழ்க்கையில் எத்தனையோ பழக்க வழக்கங்கள் உள்ளன ; காலத்திற் கேற்றவாறு அப்பழக்க வழக்கங்கள் மாறக் கூடியவை. கலிங்கத்துப் பரணியிலிருந்து ஒருசில அக்காலப் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

அரசன் பிறந்தநாள்

அக்காலத்தில் மக்கள் அரசன் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது ; அன்று அரசன் மக்கள் மகிழ்ச்சி பெருகுவதற்குப் பல காரியங்களைப் புரிவான். அந்நாள் 'வெள்ளணி' நாள் என்றும் 'நாண்மங்கலம்' என்றும் வழங்கப்


  1. தாழிசை-471
  2. தாழிசை-20