பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கற்பனை ஊற்று

83


வர் நன்கு கண்டு மகிழலாம். ஒன்றிரண்டை மட்டிலும் ஈண்டு காட்டுவோம்.

பொருளுக்கேற்ற உவமையை அமைத்துப் பொருளைச் சிறக்கச் செய்வதில் ஆசிரியர் சயங் கொண்டார் வெற்றி பெற்றுள்ளார். பேய்களின் கைகால்களின் இயல்பைக் கூறுபவர் அவற்றிற்குப் பனைமரங்களை உவமையாக அமைத்துள்ளார்.

கருநெ டும்பனங் காடுமு ழுமையும்
காலும் கையும் உடையன போல்வன.[1]

என்பது கவிஞரின் வாக்கு. அவற்றின் முதுகுகளின் தோற்றத்தைக் கூறுகிறவர்,

மரக்க லத்தின்ம றிப்புறம் ஒப்பன. 12

என்று மரக்கலத்தின் பின்புறத்தை உவமையாக வைத்துப் பேசுகிறார். பேய்களின் பல்லைக் கூறுங் கால், மண்வெட்டியையும் கலப்பை மேழியையும் உவமைகளாக அமைத்துள்ளார்.

கொட்டும் மேழியும் கோத்த பல்லின[2]

இவை போன்ற பல உவமைகளை ஆங்காங்கு காணலாம் உவமேயத்தின் உயர்விற்கேற்பச் சிறந்த பொருள்களை உவமையாகவும், உவமேயத்தின் புன்மை தோன்ற இழிந்த பொருள்களை உவமையாகவும் கூறுந் திறம் மெச்சத்தக்கது. சோழநாடு அரசனை இழந்து அல்லலுற்ற நிலையில் குலோத்துங்கனை ஞாயிற்றுக்கு உவமையாகவும், அவன் பகைவர்களை வென்று வாகை சூடியதை ஞாயிற்றின் முன் இருள் மாண்டொழிந்தாற் போல பகை-


  1. தாழிசை-135
  2. தாழிசை-139