பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9



அம்மட்டோ! மேற்கே சிறந்து விளங்கிய கிரேக்க உரோமப் பேரரசுகளோடும், கிழக்கே சிறந்து விளங்கிய சீனப் பேரரசோடும் வாணிகத் தொடர்பும், அரசியல் தொடர்பும் கொண்டு, அந்நாட்டு அரசவைகளுக்குத் தன்னாட்டுத் தூதுவர்களை அனுப்பி அரசியல் வளம் கண்டது அவ்வண்டமிழ் நாடு, புலவர் பேரவை அமைத்து, நாடெங்கும் உள்ள புலவர்களை ஒன்று கூட்டி, ஒரிடத்தே இருக்கப்பண்ணி, உயர்ந்த இலக்கிய இலக் கணப் பெரு நூல்கள் உருவாக வழிகண்டு, தன் மொழிக்கு உயர்தனிச் செம்மொழி எனும் உயர்வை அளித்த பெருமையும் அந்நாடு ஒன்றற்கே உண்டு. அக வாழ்வும் புறவாழ்வும் ஒருங்கே சிறத்தல் வேண்டும். அதுவே ஒரு நாட்டின் நல்லாட்சிக்கு அறிகுறியாம். அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் வளர வேண்டும். அவை இரண்டும் ஒன்றற்கொன்று உற்ற துணையாய் நிற்றல் வேண்டும் என நினைந்து, அவ்விரு வாழ்வையும் வளர்க்கும் அகப்புற இலக்கியங்களை ஆக்கி அளித்த நாடு, உலக நாடுகளுள் தமிழ்நாடு ஒன்றே.

இவ்வாறு எல்லாவகையாலும் ஈடு இணை இன்றி, இறப்ப உயர்ந்து விளங்கிய தமிழ் நாட்டைத் தொல்லுாழிக் காலம் முதற்கொண்டே சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர் குலத்தவர் ஆண்டு வந்தனர். அதியர், ஆவியர், ஓவியர், மலையர், வேளிர் போலும் வேறு இனத்தைச் சேர்ந்த சிற்றரசர் சிலரும், தமிழகத் தின் சிற்சில இடங்களைச் சிற்சில காலங்களில் ஆண்டு வந்தனர் என்றாலும், அவர்கள் அனைவரும் முற்கூறிய அம்மூவேந்தர்க்கு ஒருவகையால் அடங்கியே ஆண்டு வந்தமையால், தமிழகத்தின் வேந்தர் என வாழ்த்தி வழங்கப் பெற்றவர் அம்மூவேந்தர் மட்டுமே ஆவர்.

தமிழகத்தை ஆளும் உரிமை, இம்மூவேந்தர்க்கு வந்துற்றகாலம் ஏது? அதற்குமுன் அந்நாடு எவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை இப்போது அறிந்து