பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சின்னங்களையும் உடன்கொண்டு ஈழ நாட்டிற்கு ஓடி, அவற்றை அந்நாட்டு மன்னன் பால் ஒப்படைத்துவிட்டு மலைநாடு புகுந்து மறைந்து வாழலாயினன். பாண்டி நாட்டில் அமைதியை நிலைநாட்டிவிட்டு, மதுரை மன்னனாய் மணிமுடி புனைய விரும்பியபோது, பராந்தகன் அவற்றைக் கண்டிலன். உடனே அவை போன இடம் அறிந்து அலைகடலைக் கடந்து ஈழநாடு புகுந்து போரிட்டான். ஈழ நாட்டான் போரில் புறமுதுகிட்டான் எனினும், பராந்தகன் கருதி வந்த பாண்டியர் முடி முதலானவற்றோடு, சோழர் படை புகமுடியாத மலைக்காட்டு நாட்டுள் சென்று மறைந்துவிட்டான். பராந்தகன் வெறுங்கையோடு வந்து சேர்ந்தான். ஆனால், “மதுரை யும் ஈழமும் கொண்டகோ” என்ற மக்கள் பாராட்டு மட்டும் இன்றளவும் மறையாததாயிற்று.

பாண்டி மண்டலத்தை வென்றடக்கிய பின்னரும் பராந்தகன் மண்ணாசை மடியவில்லை. அதனால், தொண்டை நாட்டின் பாலாற்றின் வடகரைமுதல் சித்துார் மாவட்டம் வரை பரவிய நாட்டில் பாராண்டிருந்த வாணர் குலத்தவரை வென்று துரத்திவிட்டு அங்கும் தன் புலிக்கொடியைப் பறக்கவிட்டான். அம்மட்டோ! வாணரோடு தான் மேற்கொண்ட போரில் அவ்வாணர்க்கு வைதும்பராயன் என்ற ஆந்திர அரசன் துணை வந்தான் என அறிந்து, அவனையும் வென்று அவன் நாட்டையும் அகப்படுத்திக் கொண்டான். வடகிழக்கில் கீழைச் சாளுக்கியப் பேரரசிற்கு உட்பட்ட சீட்புலி நாட்டின் மீதும் பராந்தகன் சினம் பாய்ந்திருந்தது. அந்நாட்டிலும் இவன் அரசே நடைபெற்றது. சுருங்கச் சொன்னால், தென்குமரி முதல், நெல்லூர் மாவட்டம் வடபெண்ணையாற்றின் தென்கரை வரையும் பராந்தகன் ஆட்சியே பரவியிருந்தது.

ஆனால், அந்தோ! இப்பெருவாழ்வு நெடிது நாள் நிற்கவில்லை. பராந்தகன் கட்டிய பேரரசு அவன் வாழ்