பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


பெயரில் பெருவாழ்வு வாழ்ந்த பெரியோனாவன். குந்தவை, வேங்கி நாட்டில் அரசோச்சி லந்த கீழைச் சாளுக்கிய இளவரசனாகிய வல்லவரையன் வந்தியத் தேவன் என்பானை மணந்து, கீழைச்சாளுக்கிய, சோழர் குலத்தவரிடையே மணவுறவு நிகழ அடி கோலிய மங்கை நல்லாளாவள்; இம்மணமே, சோழர் அரியணையில் குலோத்துங்கன் அமரத் துணை புரிந்த பெருமணமாம்.

உத்தம சோழன் : சிவநேயச் செல்வர்களாகிய கண்டராதித்தருக்கும், செம்பியன் மாதேவியார்க்கும், அவர் ஆற்றிய அருந்தவப் பயனாய்ப் பிறந்தவன் இவ்வுத்தம சோழன். இரண்டாம் பராந்தகனை அடுத்து, அவன் மகன் அருண் மொழித் தேவன் அரியணை ஏறுவதே முறையாகவும், தன் பெரிய பாட்டனாகிய கண்டராதித்தர் விருப்பத்தை நிறைவேற்றுவது தன் தலையாய கடமை என உணர்ந்த அருண் மொழித் தேவனின் நல்லெண்ணத்தின் பயனாய் இவன் அரியணை அமர்ந்தான். ஆதித்த கரிகாலன் கொலைக்கு இவனே காரணமானவன் என்ற கருத்தும் இருந்தது என்றாலும், அக்கால வரலாற்றினை ஊன்றி நோக்குவார் அனைவரும் அதில் உண்மையில்லை என்ற முடிவினையே கொள்வர்; இவன் ஆட்சி புரிந்த பதினைந்து ஆண்டுகளும், அமைதி நிறைந்த நல்வாழ்வே நாடெங்கும் நிலவிற்று; அவன் நல்லாட்சிக்கு அதுவே போதிய சான்றாம்.

முதல் இராசராசன் : விசயாலயன் வழி வந்த பிற்காலச் சோழர்களுள், சோழர் பேரரசின் பெருமையை உலகம் பாராட்டுமளவு உயர்த்திய உரவோன் இம்முதல் இராசராசன். இரண்டாம பராந்தகனுக்கு வானவன் மாதேவியால், ஐப்பசித் திங்கள் சதயத் திருநாளில் பிறந்த இவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் அருண் மொழித் தேவன் என்பது. ஒரு பெரிய பேரரசைப் படைத்து, அதை அமைதி நிலவும் நல்லரசாக ஆள்வதற்கேற்ற ஆற்றலும், ஆண்மையும் அரசியல் அறிவும் இவன்பால்