பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39

வடவெல்லைப் பூசலை ஒருவாறு வாயடங்கப் பண்ணியதும் இராசேந்திரன் கங்கைநாட்டுப் படையெடுப்பைக் கருத்தில் கொண்டான். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் தான் புதிதாக அமைத்த தலைநகரையும், ஆங்குத் தான் எடுத்த பெரிய கோயிலையும், அத்தலைநகர்க்கு அணித்தாகத் தான் அமைத்துள்ள பெரிய ஏரியையும் கங்கை நீரால் துரய்மை செய்தல் வேண்டும் என்ற வேட்கை, வட நாட்டு படையெடுப்பை விரைந்து மேற்கொள்ளச் செய்தது. ஆனால், கங்கைவரை சென்று மீளக் குறைந்தது இரண்டு ஆண்டு காலமாவது வேண்டியிருக்கும்; அவ்வளவு நீண்ட காலம், தான் தலைநகரின் நின்று நீங்கியிருப்பது நன்றன்று என எண்ணினான். அதனால் அவ்வட நாட்டுப் படையெடுப்பிற்குத் தலைமை தாங்கிச் செல்வதைத் தான் ஏற்றுக் கொள்ளாது, அதைத் தகுதிபலிக்க தன் பெரும் படைத்தலைவன் ஒருவன் பால் ஒப்படைக்கத் துணிந்தான்.

வடநாட்டுப் படையெடுப்பின் பொறுப்பேற்றுக் கொண்ட படைத்தலைவன், சோழர் பேரரசின் வட கிழக்கு எல்லை நாடாகிய வேங்கி நாட்டிலிருந்து வடநாடு நோக்கிப் புறப்பட்டு விட்டான். வேங்கிநாட்டு வடவெல்லையைத் தாண்டிய தண்டநாயகன் வத்சநாட்டில் அடியிட்டான்; நாகர் வழிவந்த குறுநிலத் தலைவர் பலர், அவ்வத்சநாட்டின் பல்வேறு உட்பிரிவுகளாய மதுரை மண்டலம், நாமணைக்கோணம், பஞ்சப்பள்ளி, மாசுணி தேசம் முதலான சிறு நாடுகளை ஆண்டுக்கொண்டிருந்தனர்; இக்காலை சித்திரகோட்டம் என வழங்கும் சக்கரக் கோட்டம் எனும் இடத்தில் அவர்கள் அனைவரையும் ஒரு சேர வெற்றிகொண்ட பின்னர், சோழர் தளபதி மேலும் வடக்கு நோக்கிச் சென்றான். பின்னர் ஆதிநகர் அடைந்து, ஆங்கு அரசாண்டிருந்த இந்திரரதனை வென்று அவன் ஆட்சிக்குட்பட்ட ஒட்டரநாட்டையும்