பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. சாளுக்கியன், சோழர் அரியணையமர்தல்


கரிகாலன் வழி வந்த சோழர் மரபு, கடைச்சங்க காலத்தோடு முடிவுற்றது என்றால், விசயாலயன் வழி வந்த சோழர் மரபு, கி.பி. ஆயிரத்து எழுபதாம் ஆண்டோடு முடிவுற்றது. அவ்வாண்டில் சோழர் அரியணையில் அமர்ந்த குலோத்துங்கன், சோழர் குலத்தில் பிறந்தவனல்லன். கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாவன். ஆனால், விசயாலயன் வழி வந்த சோழர் குலப் பேரரசனாகிய முதல் இராசராசன் மகள் குந்தவைப் பிராட்டியார், என்று கீழைச் சாளுக்கியர் குலத்தில் குடி புகுந்தனளோ, அன்றே, அச்சாளுக்கிய மரபில் வந்தாரிடையே, சாளுக்கியர் சாயல் மங்கிப் போக, சோழர் சாயல் மணக்கத் தொடங்கி விட்டது. சாளுக்கிய விமலாதித்தனுக்குச் சோழர் குலக் குந்தவையால் பிறந்த கோமகனுக்கு, அச்சாளுக்கியர் குடியின் முன்னோர் பெயரைச் சூட்டாது, இராசராச நரேந்திரன் எனத் தாய்ப் பாட்டனாகிய இராசராசன் பெயரைச் சூட்டி, அவனைச் சோழர் குலத்தவனாகவே மதித்தார்கள் அக்கால மன்னர்களும், மக்களும்.

- இம்மரபு மாற்றம், கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திர சோழ தேவன் மகள் அம்மங்கை தேவியார், அத்தை குந்தவையின் மகன் இராசராச நரேந்திரனை மணங் கொண்டமையால், மேலும் வலுப் பெற்று விட்டது. அவ்விராசராச நரேந்திர சாளுக்கியனுக்கும், சோழர் குல அம்மங்கை தேவியர்க்கும் பிறந்து, பிற்காலத்தில் சோழர் அரியணையில் அமருங்கால், குலோத்துங்கன் என்னும்