பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66



ஏழ்கலிங்க நாட்டையும், சக்கரக் கோட்டத்தையும் விரைந்து கடந்து வேங்கிநாடு புகுந்து,விக்கிரமாதித்தனை விரட்டியடித்தான்; அரசிழந்த துன்பத்தோடு, மகனை இழந்த துன்பமும் வருத்த, வன்மை இழந்து கிடக்கும் சிறிய தந்தைபால், குலோத்துங்கனுக்குப் பற்றும் பாசமும் பெருகவே, வென்ற வேங்கிநாட்டு அரியணையில், விசயாதித்தனையே மீண்டும் அமர்த்தினான்:மாமன் வீர ராசேந்திரனும் மருமகன் விருப்பத்திற்கு மறுக்காது மனம் ஒப்பினான்.

தனக்குரிய நாட்டில் தன் சிறிய தந்தையை இருந்தாள விடுத்து, வீரராசேந்திரனோடு சோணாடு சென்ற குலோத்துங்கனை. ஆங்கே பெரிய வாய்ப்பு ஒன்று வரவேற்று நின்றது. தன்னினும் வலிய பகைவர் தன் நாட்டைக் கைப்பற்றிக்கொள்ள அரசிழந்த கடாரத்து அரசன் ஒருவன் சோணாட்டு அரசவையில் அடைக்கலம் புகுந்தான்; அவன் பகைவரை வென்று, அவர் கவர்ந்த கடார நாட்டு ஆட்சியுரிமையைத் தன்பால் அடைக்கலம் புகுந்தானுக்கு அளித்துவரும் பெரும் பணியை, வீரராசேந்திரன் குலோத்துங்க இளங்கோவிடம் ஒப்படைத்தான். தன் ஆற்றலைக் கடல்கடந்த நாடுகளில் வாழ் வாரும் அறிந்து பாராட்டத்தக்க ஒரு பெரும் பேற்றினைத் தனக்களித்த மாமன் வீரராசேந்திரனை வாழ்த்தி வணங்கி விடை கொண்டு, வங்கப்படை துணை செய்யக் கடாரம் நோக்கிப் புறப்பட்டான், கடாரம் புகுந்த குலோத்துங்கன் தன் நட்பரசன், நாட்டைவிட்டு ஓடிவரப் ப்ண்ணிய அவன் பகைவர்களை வென்று துரத்தினான்; வீரராசேந்திரன் பணித்தவாறே, அவனைக் கடார நாட்டுக் காவலனாக்கி ஏற்று வந்த கடமையை இனிது நிறைவேற்றினான். அந்நாள் முதல், அக்கடார நாட்டுக் காவலன், குலோத்துங்கனின் உற்ற நண்பனாயினான்; சோழர் அரியணையில் அமர்ந்திருந்த காலத்தில், அவ்வரசன் வேண்டுகோளை ஏற்று, நாகப்பட்டினத்தில் முதல் இராசராசன் காலத்தில், கடாரத்தரசன் சமைத்த,