பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
67

இராசராசப் பெரும்பள்ளிக்குச் சோணாட்டு அரசர்கள் அக்காலம்முதல் இறையிலி ஆக்கிவிட்ட ஊர்களைச் செப்பேடுகளில் வரைந்து வழங்கினான்: குலோத்துங்கன் தனக்கு அரச வாழ்வளித்தும், தன் முன்னோர் அமைத்த ஆலயத்தின் அறத்தைக் காத்தும் உற்றது புரிந்து உயர்ந்தோனாகிய குலோத்துங்கனுக்கு நன்றி செலுத்தும் வகையில், சோழகுல வல்லிப்பட்டினம் எனும் சிறப்புப் பெயர் வாய்ந்த அந்நாகப்பட்டினத்தில், குலோத்துங்கன் பெயரால் இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்ற புதிய புத்தவிகாரம் ஒன்றைக் கட்டிவைத்தான் கடாரத் தரசன்.

கடார நாட்டில் வெற்றிக் கொடி நாட்டிய குலோத்துங்கனின் பெருமை, அக்கடாரத்திற்கு அண்மையில் இருந்த நாடுகளிலும் சென்று பரவிற்று. சயாம் நாட்டிற்குக் கிழக்கேயுள்ளதும், இக்காலத்தில் கம்போடியா என்று அழைக்கப் பெறுவதுமாகிய காம்போச நாட்டின் காவலன், குலோத்துங்கனைத் தன்னாட்டிற்கு அழைத்துச் சிறப்புச் செய்தான்; கன்னித் தமிழ்நாட்டிற்கும் காம்போச நாட்டிற்கும் ஏற்பட்ட இந்நட்புறவின் நினைவுச்சின்ன பாய்த்தன்நாட்டு அரும்பொருளாகிய, கல் ஒன்றை காம்போச நாட்டான், குலோத்துங்கனுக்கு அளித்தான்; அவன் அன்போடு அளித்த அக்கல்லைக் குலோத்துங்கன் தன் குல முதற்கடவுள் கோயில் கொண்டிருக்கும் தில்லையில், சிற்றம்பலத்தைச் சார்ந்திருக்கும் திருவெதிரம்பத்தில் பலரும் காணும் இடத்தில் பதித்துவைத்துப் பெருமை செய்தான்

கடல்கடந்த நாடுகளில் பெற்ற இவ்வெற்றிச் சிறப்புகள் அளித்த கரைகாணா இன்பவெள்ளத்தில் மிதந்தவாறே தாய்நாடாம் தமிழ்நாடு வந்து சேர்ந்தான் குலோத்துங்கன். குலோத்துங்கன் கடாரத்தில் பெற்ற வெற்றி குறித்து கங்கைகொண்ட சோழபுரத்தில் விழாக்கொண்