பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
71

தமோ காரணங்கள் ஆகா சோணாட்டு அரியணையில் அமர வேண்டும் மென்ற ஆசையால் குலோத்துங்கனே முன்னின்று கலகத்தீயை மூட்டி அதிராசேந்திரனைக் கொன்றான் என்ற கருத்துடைய வரலாற்றாசிரியர்க்ளும் சிலர் உளர்.

தமக்குப்பின் நாடாளும் தகுதியுடையான் யாவன் என்பதை நாட்டு மக்களும், நாட்டின் அரசியல் அதிகாரிகளும் நன்குணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்ற அரசியல் நெறியை அறிந்து, அவ்வினவரசனுக்குத் தம் ஆட்சிக் காலத்திலேயே இளவரசுப் பட்டம் சூட்டுவதைச் சோழ மன்னர்கள் முறையாக மேற்கொண்டிருந்தனர்: அம்முறைப்படியே. வீரராசேந்திரனும் தன் மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியிருந்தானாதலின், அவன் இறந்த பின், அதிராசேந்திரன் அரியனை அமர்வதை, அந்நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும் மனம் உவந்து ஏற்றுக் கொண்டிருப்பாரே யலலது மாறுபட்டிருக்கமாட்டார், மேலும், அதிராசேந்திரன் ஆண்டது ஆறு திங்களே என்றாலும், அக்குறுகியகால ஆட்சியும், அறவழி ஆட்சியாய் அமைதி நிலவும் ஆட்சியாகவே விளங்கிற்று என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. மேலும் அதிராசேந்திரன் மெய்க் கீர்த்திகள், “வீரமும் தியாகமும் ஆரம் எனப் புனைந்து, மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரிவர்மரான உடையார் ஶ்ரீ அதிராசேந்திர தேவர்” என அவனை. வாயார வாழ்த்துவதால், அன் தன்னாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்டுப் பெரும்புகழோடு ‘அறநெறியில் அரசாண்டிருந்தான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் நோக்கின், அதிராசேந்திரன் அரியனை அமர விக்கிரமாதித்தன் துணைபுரிந்தான்: ஆனால், ஆறு திங்கள் கழித்து அவன் கொல்லப்பட்ட போது வெகு தொலைவில் வாழ்ந்த விக்கிரமாதித்தனால் விரைந்து சென்று துணை புரிய முடியவில்லை என்று கூறும்