பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
73

கலகத்திற்குக் குலோத்துங்கனே காரணமாவன் என்று கூறியிருப்பர்; விக்கிரமாதித்தன் அவைகளத்தில் அமர்ந்து: தம் அரசனைப் புகழ்ந்து பாராட்டியும், அவன் பகைவர்களை இழித்தும் பழித்தும் பாடுவதையே வழக்கமாகக் கொண்ட பில்ஹணர், தம் அரசரின் பெரும் பகைவனாகிய குலோத்துங்கன் செய்த அக்குற்றத்தைக்கூறாது. விட்டிரார்; அவர் அவ்வாறு கூறவில்லை. அது ஒன்றே: அதிராசேந்திரனின் கொலையில் குலோத்துங்கனுக்குப் பங்கில்லை; இவனுக்கு அவன் மீது பகையும் இல்லை என்பதற்குப் போதிய சான்றாகும் எனக்கூறி அக்குற்றச் சாட்டையும் மறத்துரைக்கிறார்கள் அவ்வரலாற்றாசிரியர்கள், நிற்க,

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூகூரில் கண்டெடுக்கப்பட்ட அதிராசேந்திரன் காலத்துக் கல்வெட்டொன்று, அவன் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றான் என்றும், அது தீர்ந்து அவன் உடல்நலம் பெறற்பொருட்டு, அவ்வூர். இறைவன் திருமுன் நாள்தோறும் இருமுறை தேவாரப்பாக்கள் ஒதப்பெற்றன என்றும் கூறுகிறது. அதிராசேந்திரன் அரசியல் குழப்பத்தாலோ, சமயச் சண்டைகளாலோ கொல்லப்பட்டவன் அல்லன்; அவன் நாட்டில் அவன் காலத்தில் அவ்விதக் குழப்பம் எதுவும் இடம் பெறவில்லை; மாறாக அவன் ஆட்சி, மக்கள் மனம் மகிழும் மாட்சிமையுடையதாகவே விளங்கிற்று; அவன் நோயுற்று இயல்பாகவே இறந்துபோனான் என்ற இவ்வுண்மைகள் அனைத்திற்கும் இக்கூர்க் கல்வெட்டு ஒன்றே, குன்றிடை விளக்கென நின்று விளக்கம் தருகிறது, என்று கூறிக் குலோத்துங்கனுக்குக் கொலைக் குற்றப் பழிசூட்டுவாரின் வாயடைத்து விடுவர். அவ்வரலாற்றாசிரியர்கள்.

அதிராசேந்திரன் எவ்வாறோ இறந்துவிட்டான். அவன் மறைவு இயல்பாக நிகழ்ந்ததோ அல்லது அரசியற் குழப்பத்தின் விளைவாய் அது நேர்ந்ததோ அறியோம்;