பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74

ஆனால், சோணாடு அரசனை இழந்துவிட்டது. அரசிழந்த நாட்டில் அறம் அழிந்துவிட்டது என்பது மட்டும் உண்மை. அந்தணர் செந்தழல் அவிழ்ந்தது; மனு முறை ஆட்சி மாண்டது, ஆறு சாத்திரங்களும் மாறி மருண்டன; மறையொலி மங்கிற்று; உள்ளத்தான் ஒன்றி ஒரிடத்தே வாழ்ந்த பல சாதி மக்களும் பகை மிகுந்து போரிட்டு மடியலாயினர்; மக்கள் தங்கள் தங்களுக்கு உரிய ஒழுக்க நெறிகளைக் கைவிட்டுத் தகாவொழுக்கங்களைத் தலைமேற்கொண்டனர்; குற்றம் புரிவதில் சோணாட்டார் ஒருவரையொருவர் மிஞ்சினர்; கோயில்களில், சிறப்பும் பூசையும் சீர் குலைந்தன, செயல் இழந்தன; காரிகையரின் கற்பு நெறி கெட்டழிந்தது; ஊர்களைச் சுற்றி அமைந்த அரண்களும் அழிந்தன; உள்ளத்திற்கு அரண் அளிக்கும் அருங்குணங்களும் அழிவுற்றன; சோணாட்டின் இக்கொடுங்காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது கலிங்கத்துப் பரணி, காணக் கூசும் அக்காட்சியை நீங்களும் காணுங்கள்:


“மறையவர் வேள்விகுன்றி, மனுநெறி அனைத்தும்மாறித்
துறைகள் ஓர் ஆறும் மாறிச், சுருதியும் முழக்கம் ஓய்ந்தே;
சாதிகள் ஒன்றோடொன்று தலைதடுமாறி, யாரும்
ஒதியநெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்துபோயே;
ஒருவரை ஒருவர் கைம்மிக்கு உம்பர்தம் கோயில்சாம்பி
அரிவையர் கற்பின்மாறி, அரண்களும் அழிய ஆங்கே.”

தன்னைப் போற்றி வளர்த்த பெருநாடு, தன் தாயை ஈன்ற திருநாடு அரசிழந்து அல்லல் உறுகிறது என்பதைக் கேட்டான் குலோத்துங்கன்; இருநூறு ஆண்டுகளாக இறவாப் பெருநிறையில் வாழ்ந்த ஒரு பேரரசு வீழ்ந்து போவதை அவனால் வாளா பார்த்திருக்க முடியவில்லை. மேலும் கங்கை கொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் எனும் முறையால், அச்சோணாட்டு அரியணையில்