பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82

மலைநாட்டு மக்கள் மறங்கொண்டு போராடினார்கள்; ஆயினும் எண்ணற்றோர் உயிர் இழந்தனர். காந்தளூர்ச் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேரரின் கடற்படை இருமுறை அழிக்கப்பட்டது. கோட்டாற்றை எரியூட்டி அழித்தார்கள். சேரமன்னன் செருக்களம் விட்டோடி வந்து சோழ மன்னன் அடிபணிந்தான்; அவன் ஆட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டான்.

பாண்டியநாட்டுப் போரிலும், சேரநாட்டுப் போரிலும் வெற்றி பெற்ற குலோத்துங்கன், அந்நாடுகளில், இவை போலும் போர்க் கிளர்ச்சிகள் இனியும் தலைதூக்கி விடக்கூடாது; அதற்கு வழியாது என ஆராய்ந்தான்; பாண்டியர்க்கும், சேரர்க்கும் படைதிரட்டும் வாய்ப்புக் கிட்டுவதினாலேயே இத்தகைய கிளர்ச்சிகள் அவ்வப்போது இடம் பெறுகின்றன. அவ்வாய்ப்புக் கிட்டாமல் செய்துவிட்டால் இவை இடம் பெறா என உணர்ந்தான். அவ்வுணர்வின் பயனாய்த் தமிழகத்தின் தென்கோடி முனையிடை ஊராகிய கோட்டாறு முதலான பகை நாட்டுப் பேரூர்கள் ஒவ்வொன்றிலும், சோணாட்டின் நிலைப் படைகளை நிறுவி, அப்பகைவர்கள் படையெடாவாறு பார்த்துக் கொள்ளப் பணித்துவிட்டுப் பழையாறை நகர் வந்து சேர்ந்தான்.

தென் கலிங்க வெற்றி : தன் சிறிய தந்தை விசயாதித்தன் மாண்ட பின்னர் வேங்கிநாட்டு ஆட்சி உரிமையைக் குலோத்துங்கன் ஏற்றுக்கெண்டான்; தந்தை வழிவந்த தர்ய்உரிமை நாடாதலின், வேங்கி நாட்டில் இருந்தாள வேண்டுவது தன் நீங்காக் கடமை ஆயினும், வடகோடி நாடாகிய வேங்கிநாட்டிற்குத் தான் வந்து விட்டால், தாய்வழி பெற்ற சோழர் பேரரசை இழக்க வேண்டிவரும் என அறிந்த குலோத்துங்கன், வேங்கி. நாட்டு வாழ்வை விரும்பினானல்லன்; ஆயினும் அந்நாட்டு உரிமையை அறவே கைவிடவும் அவன் விரும்பவில்லை; அதனால் அதன் ஆட்சிப் பொறுப்பைத் தன் .