பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


குரிய பெரும் புலவராகிய சயங் கொண்டார் கலிங்கத்துப் பரணியைப் பாடிக் குலோத்துங்கனைப் பெருமை செய்தார். கலிங்க வெற்றியின் சிறப்புக்களை விளங்க உணர விரும்புவார், அப்பரணியின் துணை பெறுவாராக.

ஈழநாட்டுப் போர் : குலோத்துங்கன் பெற்ற வெற்றிகளுள், வடகலிங்க வெற்றியே பெருவெற்றியாம். எனினும், அதுவே அவன் பெற்ற இறுதி வெற்றியுமாகும்; கலிங்கப் போருக்குப் பின்னர் அவன் புகுந்த களங்களிலெல்லாம் வெற்றி பெறுவதற்கு மாறாகத் தோல்வியே கண்டான். சோழராட்சிக்கு உட்பட்டிருந்த ஈழ நாட்டில், உரிமைப் போர் உணர்ச்சி குலோத்துங்கன் ஆட்சியின் தொடக்கக் காலத்திலேயே உருப்பெற்று விட்டது; ஈழ நாடாண்ட இறுதிச் சோழன் அதிராசேந்திரனே எனத் துணிந்து சொல்லலாம். சோழர் குலப் பகைவர்களாகிய சேர பாண்டியரோடு நட்புறவு மேற்கொண்டிருந்த சிங்களவர், அவர்களைப் போலவே தனியாட்சி மேற்கொள்வதில் தணியா வேட்கையுடையராய் விளங்கினர்; அதற்கு ஏற்ற காலத்தை எதிர் நோக்கியிருந்த அவர்கள், சோணாட்டில் அதிராசேந்திரன் இறக்க, அரசியல் குழப்பம் தலையெடுத்ததும், உரிமைப் போருக்கு உரிய காலம் அதுவே என உணர்ந்து, ரோகண நாட்டில் தலை மறைந்து வாழும் தங்கள் வேந்தன் விசயபாகுவைக் கொணர்ந்து, ஈழ நாட்டின் கோமகனாக முடி சூட்டி மகிழ்ந்தார்கள்; அவன் அனுராதபுரத்திலும், பொலன்னருவாவிலும் இருந்த சோழர் படைகளை வென்று துரத்தினான். தன் படை தோல்வியுற்றது எனக் கேட்ட குலோத்துங்கன், மற்றொரு பெரும் படையை ஈழ மண்டலத்திற்கு அனுப்பினான்; ஆனால் அப்படையும் தோல்வியே கண்டதும், அனுராதபுரமும், பொலன்னருவாவும் ஈழவரின் உடைமைகளாயின; விசயபாகு ஈழ நாடு முழுமைக்கும் மன்னனாய் முடி புனைந்து கொண்டான், தன் பகைவன் மதுரை மன்னனுக்கு இருக்க இடம் தந்தனர்