பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96



பெயர் சூட்டி நினைவுச் சின்னம் நாட்டினார்கள் நாட்டு மக்கள். “சுங்கம் இல்லாச் சோழ நாடு” என்ற சிறப்புப் பெயர், சோணாட்டோடு வாணிகத் தொடர்புடைய தொலை நாடுகளின் தெருவெங்கும் சென்று வழங்கிற்று. குலோத்துங்கன் வெற்றி விளங்கப் பரணி பாடிய பெரும் புலவராகிய சயங் கொண்டாரும், மூவர் உலா பாடிய பெரும் புலவராகிய ஒட்டக் கூத்தரும், சுங்கம் தவிர்த்த அச்சிறப்பைத் தம் பாவிடை வைத்துப் பாராட்டியுள் ளார்கள். • -

"அவனி திருமகட்காக, மன்னர் அழிவந்த சுங்க

தவிர்த்தபிரான்”-பரணி.               

‘புவிராசராசர் மனு முதலோர் நாளில்

தவிராத சுங்கம் தவிர்த்தோன்”-உலா.

நிலம் அளக்கப் பெற்றமை; நிலங்கள் மீது விதிக்கும் வரிகள் தரும் வருவாயே, நாட்டின் வருவாயில் பெரும் பகுதியாம், அதுவே நிலையான வருவாயுமாம். ஆதலின், வரி விதிக்கலாம் நிலங்களின் பரப்பு யாது, அந்நிலங்கள் மீது விதிக்கும் வரியின் அளவு யாது என்பதில் வேந்தர்கள் அந்நாள் தொட்டே விழிப்புடையவராய் விளங்கினார்கள். கணக்கெடுப்பு முறையில் கரை கண்டு விளங்கும் இக் காலத்தில், நிலங்களின் பரப்பு, அந்நிலங்களிலிருந்து எதிர் நோக்கலாம் வரிகளின் வருவாய் இவை குறித்து ஐயமறத் தெரிவிக்கும் கணக்கினைப் பெற மாட்டாது கலங்கு கிறார்கள் நாடாளும் தலைவர்கள். அக்குறை ஓர் அரசையே அழித்து விடுமாதலின், அதில் விழிப்புணர்வோடு வாழ்ந்து வந்தான் குலோத்துங்கன். துங்கபத்திரை ஆற்றின் தென்கரை முதல், குமரிமுனை வரைப் பரவி யிருந்த ஒரு பேரரசில், நிலங்களின் அளவு, அரசியலார் அறிந்து கொள்ள முடியாத வகையில் அவ்வப்போது வேறுபட்டுப் போவது எளிதில் நிகழக் கூடிய தா தலின்,நிலங்கள் அவ்வப்போது அளக்கப் பெறுதல் வேண்டும்,