பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலிங்க இசையாது பொய்யுரையை மெய்யென்றுரைத்து வாழும் ஆரியருக்கு, அரச அவையிலே இடங் கிடைத்துவிட்டது. மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும்! பாவம்! ஆரியர்கள் என்ன செய்கிறார்கள்? ஏதோ வேள்வி என்றும் வேதமென்றும் கூறிக் கொண்டுள்ளனர். ' பசுபோல் இருக்கின்றனர். படை எனில் பயந்தோடுகின்ற னர். நாம் இடும் பிச்சையை இச்சையுடன் ஏற்று, கொச் சைத் தமிழ் பேசி, ஊரிலே ஓர் புறத்தில் ஒதுங்கி வாழ் கின்றனர். எங்கோ உள்ள தமது தேவனைத் தொழுது உடல் இளைத்து உழல்கின்றனர். நம்மை என்ன செய்கின் றனர்?" | “நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை! மனமிருக்கி றது; மார்க்கம் இன்னமும் கிடைக்கவில்லை. நாட்டிலே வீரருக்கே இன்னமும் இடமிருக்கிறது. நாட்கள் பல போயின பின், நம்மவர் நிலை யாதாகுமோ அறியேன், புலி எலி யாகுமோ? தமிழர் தாசராவரோ என்றும் நான் அஞ்சு கிறேன். வீண் பீதி! ஆரியர் ஏதும் செய்யார், நாதா! காதல ருக்குத் தூதுவராக இருந்து, இருதய கீதத்தை ஒலிக்கச் செய்கின்றனர். அவர்களின் மீது ஏனோ உமக்கு வீணான ஓர் வெறுப்பு! "கண்ணே ! கவலைதரும் பேச்சை விடுவோம். காலம் கடுகிச் செல்கிறது. நான் போகுமுன் கனிரசம் பருகினால் என் களைப்பு தீராதோ! இப்படி துடியிடை துவளத் துள் ளாதே மானே! விடமாட்டேன்! இந்த மானைப் பிடிக்கா விட்டால், மதம் பிடித்த யானையையும், மடுவிலே மறை யும் புலியையும் வேட்டையாட முடியுமோ? நில்! ஓடாதே அதோ, காலடிச் சத்தம். ஆமாம்! அரசிளங்குமரி தான். சுந்தரிதேவியின் சதங்கை ஒலிதான் அது. போய். வாரும் கண்ணாளா! ஜாக்கிரதையாக வேட்டையாடும். மான்வேட்டையல்ல; மங்கையர் வேட்டையுமல்ல; புலி,