பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராணி 13 கரடி, காட்டுப்பன்றி முதலிய துஷ்ட மிருகங்கள் உலவும் காடு. இளைய ராணியாரின் குரலா கேட்கிறது? ஆமாம்! அரசிளங்குமரி அம்மங்கையின் குரல்தான்! பூங்காவிலே நம்மைக் கண்டுவிட்டால்? நாம் இதுவரை அரசிளங்குமரியின் கண்களில் பட வில்லை. ஆனால் காதுக்கு விஷயம் எட்டித்தான் இருக் கிறது! | யார் சொல்லிவிட்டார்கள்? சொல்லுவானேன்? என் கண்களின் மொழியை அவள் அறியாது போகமுடியுமா? அம்மங்கையும், ஒரு பெண் தானே! அதோ கூப்பிடுகிறார்கள், என்னைத்தான். பூக் குடலை எங்கே? கொடுங்கள் இப்படி! இதோ வந்தேனம்மா! வந்துவிட்டேன்! போதும், இது இருபத்து ஏழாவது முத்தம்! போதும், காலடிச் சத்தம் கணமாகிவிட்டது; விடும்...புறப் படும். மற்றதைப் பிறகு மறவாதே, நான் வருகிறேன். தஞ்சமடைந்தவனைத் தள்ளமாட்டாய் என்று என் நெஞ்சு உரைக்கிறது."

  • 'சரி! சரி! வேட்டை முடிந்ததும் விரைந்து வாரீர்; மாலை தொடுத்து வைப்பேன்,

மதியே, மறவாதே! நான் வருகிறேன். குலோத்துங்க சோழன் அரண்மனைப் பூங்காவிலே நடந்த காதற் காட்சி, நாம் மேலே தீட்டியது. அந்தப்புரத்