பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலிங்க திலே, அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயிர் போன் றிருந்த தோழி, தன் காதலனைக் காண, பூங்கா புகுந்தாள். அவளுக்காக மாமரத்தடியிலே காத்துக் கிடந்த வீரன், தென் றல் கண்டவன்போல், தாவிக் குதித்தெழுந்து தையலை ஆரத் தழுவினான். கையிலிருந்த பூக்குடலை தரையில் விழ, கூந்தல் சரிய, கோதை குதூகலமாகத் தன் காதலனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அவர்கள் கிளப்பிய 'இச்' சொலி கேட்ட பறவைகள், மரக்கிளை விட்டு மற்றோர் கிளைக்குத் தாவின. வானம் துல்லிய நிறத்தோடு விளங்கிற்று. கதிரோன் ஒளிப் பிழம்பாக மட்டுமே இருந்தான். வெப்பத்தை வீசும் வேளை பிறக்கவில்லை. காலை மலர்ந்து, மாந்தர் கண் மலர்ந்த நேரம். மாலை மலரும் காதல் அரும்பாகி இருந் தது எனினும், அன்று அவனுக்குக் காலையிலேயே மலர்ந்து விட்டது. மாலையில் அவன் வீடு திரும்ப நெடுநேரம் பிடிக்கும்! வேட்டைக்குச் செல்கிறான் அன்று! வேட்டைக்குப் புறப் படுமுன், வேல்விழியாளைக் கண்டு, விருந்துண்டு போக மனம் தூண்டியது. கால்கள் வேலிகளையும் முட்புதரை யும் தாண்டின. கள்ளத்தனமாக உள்ளே நுழைந்தான். காவலன் காணவில்லை என்பது அவன் நினைப்பு. காவலனுக்குக் கண்ணுமுண்டு; கருத்துமுண்டு! எனவே காதலர் கூடிப் பேசுவதைக் கண்டுங் காணாதவன் டோல், பலமுறை இருந்ததுபோல், அன்றும் இருந்தான். மேலும், அந்த வஞ்சி அரசிளங்குமரியின் ஆருயிர்த் தோழி குணவதி, கோலமயில் சாயலும், கிளிமொழியும், கனக நிறமும், கருணை உள்ளமும் பெற்ற பண்பினள். அவளது காதலன் வீரர்க்கோர் திலகம். மன்னன் குலோத்துங்கனின் குதிரைப் படைத்தலைவருள் ஒருவன். வீரத்தாலேயே, இளம் பருவத்திலேயே அந்த உயர்நிலை பெறமுடிந்தது. தொண்டைமானிடமிருந்து 'தோடா' பரிசு பெற்றவருள் அவன் ஒருவன். எனவே இவ்விருவரும் சந்தித்துப்பேச, மன்