பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராணி னனின் பூங்காவை மன்றலாக்கிக் கொண்டது கண்டு காவற் காரன் களித்தானேயன்றிக் கோபித்தானில்லை. அவர்கள் சந்திக்கும்போது, அவன் உலகமே காதல் * மயமாக இருப்பதை எண்ணுவான்! குக்குக்கூவெனக் குயில் கூவி, காதற் கீதத்தை அள்ளி அள்ளி வீசுவதை நினைப் பான். நெடுநாட்களுக்கு முன்பு, நீர் மொள்ள அருவிக்கு வரும் நீலநிறச் சேலைக்காரி வேலாயியைத் தான் கண்டதும், கனைத்ததும், அவள் முதலில் மிரண்டதும், பிறகு இணங் கியதும், ஆகிய பழைய காதல் நிகழ்ச்சியை எண்ணுவான். "நரைத்தேன் இன்று; ஆனால் நானும் முன்னம் நாடினேன், பாடினேன், ஆடினேன் அணங்குக்காக என்று மனதில் எண்ணிக் கொள்வான். தோட்டத்து வாசலிலே நின்று, யாரும் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொள்ளும் தொழிலைவிட்டு, காதலரைக் காண யாரும் புகாதபடி காவலிருப்பான். இதனைக் காதலர் அறியார். அவர் தம்மையன்றி வேறெதைத்தான் அதுகாலை அறிதல் முடி யும்? அரசிளங்குமரியின் குரல் கேட்டு, அரைகுறையாயிற்று அன்று காதலர் விருந்து. விரைந்தோடிவந்த தோழியைக் கண்ட அம்மங்கை, கோபித்துக் கொண்டு, காலமும் அறி யாய், இடமும் தெரியாய், கடமையையும் மறந்தாய். என்று கடிந்துரைத்தாள். தோழி தலைகுனிந்து நின்றாள். பூக்குடலை காலியாகவே இருந்ததைக் கண்ட மற்றத் தோழியர், மனம் பறிக்கும் வேளையிலே மலர் பறிக்க மறந்தாள் என்று கூற அதுவரை கோ பித்ததுபோல் பாவனை செய்த அரசிளங்குமரி, கலீர் எனச் சிரித்து, தோழி யின் கன்னத்தைக் கிள்ளி, 'கதிரோன் வராவிட்டால் தாமரை மலராது என்பார்களே, அதுபோல் உன் அன்பன் வராவிட்டால், உன் முகம் மலருமோ!' என்று கேலி செய் தாள். தோழி அப்போதுதான் பயந்தெளிந்தாள். பயம் போனது. நாணம் ‘ நான் உன்னை விடுவேனா?' என்றுரைத் துக் கொண்டே அவளைப் பிடித்துக்கொண்டது.