பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 கலிங்க "வேட்டையாடக் காட்டுக்குப் போகக் கிளம்பியவன் இங்கே வந்தது ஏனடி? என்று அரசிளங்குமரி ஒரு தோழி யைக் கேட்க, அவள் “இவளைக் கண்டு மானென்று மயங்கி வந்தான் போலும்! என்று சொல்லிச் சிரித்தாள்: வேட்டைக்குக் கணைகள் வேண்டும்; இங்கும் கணை விடு காட்சிதான் நடந்தது என்று கிண்டல் செய்தாள் அரசகுமாரி. “ஆமாம் தேவி! சாதலுக்குச் செலுத்தும் கணைகள் காட்டிலே! காதலுக்குக் கணைகள் காட்டில் அல்லவே! என்றாள் குறும்புக்காரத் தோழி, "ஆமாம்! காட்டில் அல்ல! நம் வீட்டுத் தோட்டத் தில் என்று கூறிக்கொண்டே, அம்மங்கை காதற் குற்ற வாளியைக் கைப்பிடித்திழுத்துத் தரதரவெனச் சுற்றி ஆடினாள், களித்தாள். அம்மங்கையும் அதன் வயப்பட்டாளோ என்று மற்ற தோழியர் சந்தேகித்தனர். யார் கண்டார்! யார் காணவல்லார்! காதற் கணை கள் அம்மங்கையை மட்டும் விட்டுவிடுமோ! அதன் சக்தி யின் முன்பு, பட்டத்தரசியாக வேண்டியவரும் தட்டுக்கெட்டு தடுமாறித்தானே தீருவர்! கண்டவர் அஞ்சிடக் கடும் போரில் தன்னிகரற்ற குலோத்துங்கனின் குமரியானாலும், குமரன் தோன்றிக் குறுநகை புரியின் குளிரும் விழியு)-ன் கொடியெனத் துவண்டு சாயத்தானே வேண்டும். நடனராணி! கூச்சம் இப்போதிருந்து பயன் என்ன? வா, பந்தாடுவோம் என்று அரசிளங்குமரி கூறினாள். நடனராணி என்ற பெயரே நாம் குறிப்பிட்ட தோழியுடை யது. நடனத்திலே மிக்சு கீர்த்தி வாய்ந்தவள், நாட்டினர் அதுபற்றியே, நடனராணி என்று அவளை 'அழைத்தனர். பந்தாடினர் பாவையர்; நடனராணியை விட்டுப் பிரிந்த அவள் காதலன் வீரமணியின் மனம் படும்பாடு, அவர்களாடும் பந்தும் படாது என்னலாம். கிளியைக் கண்