பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 கலிங்க எனவே குறுநில மன்னரும் குலோத்துங்கனுக்கு அடங் கியே வாழ்ந்தனர்! தோள் தினவெடுத்தது. வேட்டை ஒரு சிறு பொழுது போக்காகுமென்றே மன்னன் புகுந்தான் காட்டிலே. தினவெடுக்கும் உள்ளத்தைத் திருத்தும் நிலை காணா வீரமணி, மன்னன் பின் சென்றான்; மனதை மங்கை பால்விட்டே வந்தான். வழி நடந்தான். இயற்கை எழில் செயற்கைப் பூச்சின்றி பூரித்துக் கிடக் கும் காட்டினுள்ளே, மன்னன் குலோத்துங்கன் தன் பரி வாரங்களுடன் வேட்டைக்காகப் புகுந்த காட்சியும், குதிரை மீதமர்ந்து பாய்ந்து சென்ற வீரர்களின் வருகை கண்ட துஷ்ட மிருகங்கள் மிரண்டோடினதும் கண்ட வீரமணிக்கு, குலோத் துங்கன், இளவரசராக இருந்தபோது, வடநாடு சென்ற காலையில், சோழநாட்டிலே சதிகாரர் கூடிக் கொண்டு, குலோத்துங்கனுக்கென்று கங்கை கொண்ட சோழன் குறித் திருந்த மணிமுடியை, கங்கை கொண்ட சோழனுடைய மகன் அதிராசேந்திரனுக்குச் சூட்டியதும், அதுபோது சோழமண்டலமே காட்டுநிலை அடைந்ததும், பிறகு, வாகை சூடி வடநாட்டிலிருந்து குலோத்துங்கன் திரும்பிய தும் சதிகாரர் பதுங்கிக் கொண்டதுமான சம்பவமும், சமரும் காட்சியும் நினைவிற்கு வரவே புதர்களிலே மறையும் பரலிக்குட்டிகளையும், மரப்பொந்துகளில் ஓடி ஒளியும் மந்தி களையும், வீறிட்டு அலறி ஓடும் வேங்கையையும், உறுமிக் கொண்டே ஓடும் காட்டுப் பன்றியையும், மிரண்டோடும் மான் கூட்டத்தையும் கண்டு களித்தான். காட்டிலே கணைகள் சரமாரியாய்க் கிளம்பின. ஆர வாரமும், ஆர்ப்பரிப்பும் பறை ஒலியும் பலவுமாகக் கலந்து காட்டிலே கலக்கத்தை உண்டாக்கிற்று. வேட்டை விருந்தை மன்னருக்குத் தந்த காடு, வனப்பு வாய்ந்தது. வேங்கை, குறிஞ்சி, தேக்கு, கமுகம், புன்னாகம் முதலிய மரங்கள் நிறைந்து காணப்பட்டன. உலர்ந்து காணப்பட்ட ஒமை மரங்களும், புகைந்து கிடந்த வீரை மரங்களும், காரைச் செடியும், சூரைச் செடியும் காண்போருக்கு இயற்கையின் விசித்திரத்தை விளக்கின.