பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராணி 23 சகல கலை வல்லவளே! பேச்சு போதும். பந்தாடு வோம் இனி" என்று அம்மங்கை கூறிட, பாவையர் பந்தாட லாயினர். உற்சாகமற்றிருந்த நடனராணியின் உள்ளத் தையும் பந்தாட்டம் குளிரச் செய்தது. கைவளைகள் 'கலீல் கலீல்' என ஒலிக்க, காற் சிலம்புகள் கீதமிட, கூந்தல் சரிய, சூடிய பூ உதிர, மகரக்குழை மானாட்டமாட.., இடை திண்டாட, 'மன முந்தியதோ, விழி முந்தியதோ,' கரம் முந்தியதோ' என்று காண்போர் அதிசயிக்கும் வித மாக, பாவையர் பந்தடித்துக் களித்தனர். பூங்கொடி. கள் துவளத் தொடங்கின. வியர்வை அரும்பினது கண்ட மன்னன் மகள் “பந்தாடினது போதுமடி, இனி வேறோர் விளையாட்டுக் கூறுங்கள். ஓடாமல் அலுக்காமலிருக்க வேண்டும் என்றுரைத்திட, நடனராணி “பண் அமைப் போமா? என்று கூற, ஆரிய மங்கை ‘பதம் அமைப்போம்' என்று கூற, 'சரி' என இசைந்தனர். ஒருவர் ஒரு பதத் தைக் கூற அதன் ஓசைக் கேற்பவும் தொடர்பு இருக்கவு மான பதத்தை மற்றவர் இசையுடன் உடனே அமைந்திட வேண்டுமென்பது அவ்விளையாட்டு. சிந்தனைக்கே வேலை சேயிழையார் சுனையில் துள்ளும் மீன்போல், சோலை யில் தாவும் புள்ளிமான் போல் தாவாமல் குதிக்காமல் விளையாட வழி இதுவே. அம்மங்கை துவக்கினாள், பதம் அமைக்கும் விளை பாட்டினை! நடனராணியும் ஆரிய மங்கை கங்காயாலா வும் அதிலே கலந்துகொண்டனர். மற்றையத் தோழியர் வியந்தனர். அம்மங்கை : நாட்டி நடனராணி : இணைவிழி காட்டி கங்கா : இளையரை வாட்டி அம்மங்கை : மனமயல் மூட்டி நடனராணி : இசை கூட்டி கங்கா : விரக மூட்டி