பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்வு முன்னுரை அமுதூறும் அழகு தமிழில் சுவையூறும் சொல்லு திர்த்து அரசியல் உலகிலும் இலக்கிய உலகிலும் புகழ்க் கோபுரமாய் நிற்பவர் பேரறிஞர் அண்ணா . இந்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் புரட்சி கண்ட அவர். இலக்கிய உலகிற்கும் படைத்தளித்த செல்வங்கள் பல உள. புதினம், சிறுகதை, நாடகம், மடல், கட்டுரை, இதழுரை என்ற வ..வங்களில் எண்ணிக்கையில் இரண் டாயிரத்தைத் தாண்டி நிற்கின்றன; எண்ணத்தால் என் காலத்தையும் தாண்டி நிற்கின்றன அவரது படைப்புகள். அவற்றுள் ஒன்றே குலோத்துங்கச் சோழனின் கலிங்கப் போரினைப் பின்னணியாகக் கொண்டு தின வடிவில் பிறந்த கலிங்கராணி. பிறந்தோர் எல்லாம் பெயரோடு வாழ்வதில்லை; வாழ்ந்தாலும் மடிந்தபின் மற்றோா நினைப்ப வாழ்ந்த தில்லை. இலக்கியங்களுக்கும் இந்நியதி பொருந்தும், புற்றீசலாய்ப் புதினங்கள் தோன்றிய நாளில், அண்ணாவின் புதினப் படைப்புகள் இருள் மண்டிக் கிடந்த தமிழகத்தில் ஒளிவீசிய இளஞ் ஞாயிற்றுக் கதிர்கள். அண்டம் உள்ள ளவும் ஆதவன் உலவுவது போல, அவரது படைப்புகள் இளைய தலைமுறைகளின் ஒளிமயமான எதிர்க லத்தைப் பற்றியும், அவ்வெதிர் காலத்திற்கு இடையூராய் அமை கின்ற நிகழ்காலத்தைப் பற்றியும், இந்நிகழ்காலச் சீரழி வுக்கு அடிகோலிய இறந்த காலத்தைப் பற்றியும் இயம்பிய வண்ண ம் இருப்பன. 'கலிங்கராணி' இலக்கிய வ'னில் மிளிரும் எழில்மிகு விண்மீனாகும். ஒரு பதினத்தின் இலக் கியச் சிறப்பை அதன் கலைக் கூறுகளாக அமையும் கதைக்கரு. கதை நிகழ்ச்சி, கதைமாந்தர் என்பனவற்றால் ஆய்ந்தறியலாம். கலிங்கராணி பெற்ற