பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலிங்க ராணி "வேங்கையைக் கண்டால் பயமிருக்காதோ? வேலிருக்கும்போது! "சிறுத்தை சீறுமாமே? ஆமாம்: சிரித்துக்கொண்டே அதைத் துரத்திப் பிடிப் பேன்" “கண்ணாளா! காட்டிலே நாட்டிலுள்ளோருக்கு என்ன வேலை? ஏன் இந்த வேட்டை? மன்னன் மனமகிழ மதுரகிதம் கேட்கலாம்; நடனம் காணலாம்; மிருக வேட்டை யாடி ஆபத்தை அணைத்துக் கொள்வதிலே ஓர் ஆனந் தமா? 'வீரருக்கு வேட்டை வெண்ணிலாச் சோறு! வெஞ் சமரே விருந்து! தோட்டத்துப் பூவைத் தொட்டுப் பறித்துக் கொண்டையில் செருகிக் கோதையர் களிப்பதுபோல, வேலால் வேங்கையைக் குத்திக் கொன்று, அதன் தோலை யும் நகத்தையும் எடுத்து வரும்போது எமக்குக் களிப்பு.” “ஆபத்தான விளையாட்டு. அஞ்சாதே அஞ்சுகமே! வீரரின் ஆரம்பப்பள்ளி அது தான் | எனக்கென்னமோ, நீங்கள் எவ்வளவு சொன்ன போதி லும் நெஞ்சிலே துடிப்பு இருக்கிறது." 8-205-க-ரா-1