பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 கலிங்க சிற்றிடையே, சோதிக்காதே! சுந்தர முகத்தின் சோபிதம் சிதைகிறது. உன் புன்னகையை எனக்குத் தா; நான் புறப்பட வேண்டும். "புன்னகை போதுமா? வள்ளல்கள், கேட்டதற்கு மேலும் தருவர். தேவி! நீ உன் பக்தனுக்கு வரந்தர மறுப்பாயா? எவ்வளவு சமர்த்தான பேச்சு! சரசத்தில் நீரே முதல் பரிசு பெறுவீர், “உண்மை! உன்னைப் பெறும் என்னை, ஊரார் அங் ஙனமே கருதுகின்றனர். "பூங்காவில் இவ்விதம் பேசி மகிழ்வதை விட்டு, 'புறப்படுகிறேன் புலிவேட்டைக்கு' என்று கூறுகிறீரே? நெஞ்சி லிரக்க மற்றவரே! கொஞ்சுவதை விடும்." வஞ்சி! வதைக்காதே, நேரமாகிறது. நினைப்பிலே ஏதேதோ ஊறுகிறது. "ஊறும், ஊறும். ஊகூம், அது முடியாது. நட வாது, கூடாது. என்ன துணிச்சல்! என்ன ஆசை! எவ்வளவு ஆனந்தம்!" ':அணுச் சஞ்சலமேனும் இல்லாத இடம்!" "கீதமா?" 'யாழின் நரம்புகள் தடவப்பட்டபின், இசை எழாதோ' "அரச அவையிலே புலவராக அமரலாம் நீர் வேண்டாமம்மா! புலவர்கள் தொழில் கெட்டே விட்டது. முன்பு நம் நாட்டுப் புலவர்கள், ஓடும் அருவி, பாடும் குயில், ஆடுகின்ற மயில், துள்ளும் மான், மலர்ச் சோலை, மாது உள்ளம் முதலியன பற்றிப் பாடி மகிழ்வித் தனர். இப்போதோ, மச்சாவதாரமாம், மாபலி காதை