பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 99 * வரும்போது قي نيقيي பிரத்தியட்ச வாழ்க்கையினும் உன்னதமானதாகத் தானே இருக்க வேண்டும். எனவே காவியத்தின் ஒவ்வோரணுவிலும் குணச்சித்தரிப்பில் அந்த அழகைச் செறிய வைத்திருப்பான் கவிஞன். அது அவன் கடமையும் கூட.

'வஞ்சனை நீசெய

வள்ளல் சீற்றத்தால் எஞ்சலில் உலகெலாம்

எஞ்சும் எஞ்சும் என்று அஞ்சுகின்றேன். இதற்கு

அறனும் சான்றரொ!"

(48) சீற்றம்-வெகுளி, எஞ்சல்இல்-மிகுதலில்லாத, சான்று-சாட்சி

என்று சீதை அறத்தைச் சான்றாக அழைத்து இராண்வனை நிந்திக்கும்போது தர்மத்தின் பூரண செளந்தரியம் அதில் விளங்கக் காண்கிறோம். இதுகேட்டு இராவணன் அளப்பரிய சினங் கொள்கிறான். அச்சினங்கண்டு அனுமன் கூடச் செயல்மீறி இராவணன் ஏதாவது செய்து விடுவானோ என்றஞ்சினான். பின் மீண்டும் குழைவு தோன்றப் பேசுகிறான் இலங்கையர் கோன், நயமும் பயமும் காட்டிக் குழந்தையிடம் ஏமாற்ற முயல்வது போலிருந்தது அவன் முயற்சி. இறுதியில் திரும்பிச் சென்றுவிடுகிறான் இராவணன். சீதையின் மனங்குலையாத திண்மையையும் நிந்தனைமொழிகளையும் இராவணன் குழைவும் அச்சுறுத்தலும் இக்காண்டப்பெயருக்கு ஏற்ப இப்படலமும் ஒருவகையான தர்ம செளந்தரியத்துடனேயே அமைந்துள்ளது. உயிரளித்த திருஉருவம் இராவணன் திரும்பிச் சென்றபின், மறைந்திருந்த அனுமன் தேவிக்கு முன் பிரவேசிக்கக் கருதினான். காவ லாகச்