பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

நா. பார்த்தசாரதி 101 o' படிவம்" என்று அனுமனை முதலில் மலைக்கச் செய்த கம்பன் இறுதியில் தன் கவிதைத் துணையைக் கொடுத்து, "அடி முதல் முடியின் காறும் பிராட்டி அறிவுறச் சொல்லுமாறு செய்கிறான். பின் இராமபிரான் கூறிய அடையாள மொழிகளைச் சொல்விக் கணையாழியையும் எடுத்துச் காட்டுகிறான். இதனாலும் தான் தோன்றியதனாலும் தன் பேருவகையை காட்டித் திறமையை விளக்குவதாலும் அனுமன் தேவிக்கு உயிரளித்த நற்பேற்றை பெற்று விடுகின்றான்.

- "முத்தநகையாள் விழியின்

தத்தியுக மென்குதலை

தள்ளவுயிர் தந்தாய் உத்தம என இனைய

வாசகம் உரைத்தாள் ஆவி-கண்ணிர்த்துளி, எனா - என்று

என்று அவன்தன் உயிரளித்தவன் என்பதைச் சீதாபிராட்டியே கூறும் படியாகச் செய்திருக்கும் கம்பன் செய்யுளால் இவ்வுண்மை புலனாகும். இப்படலத்திற்கான பெயர் இரண்டோர் பிரதிகளில் திருவாழி காட்டு படலம் என்றிருந்தாலும் உருக்காட்டுபடலம் என்ற பெயரே பொருத்தமும் சிறப்பும் உடையதாம். சுந்தர காண்டமென்றும் செளந்தரியச் சேர்க்கையில் நடுஇடம் பெற்று நல்லழகு கொடுக்கும் முக்கியப் பகுதியாக அமையும் தகுதி இந்த உருக்காட்டு படலத்திற்குத்தான். ஆகையால் இப்படலம் இக்காண்டத்தின் சுந்தரமென்ற அடைமொழிப்பொருளை மிக உயர்ந்த முறையில் உரிமையாகப் பெற்றுவிடுகிறது.

'சூளாமணி சீதை அனுமனிடம் தன் அடையாளப் பொருளாகச் சூளாமணி கொடுத்து அனுப்பும் செய்தி இச்சூளாமணிப் படலத்திற் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு