பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 102 கலித்தொகை பரிபாடல் காட்சிகள் முன்பாக அனுமன் பிராட்டியை நோக்கித் தான் அவளை தன் புயங்களிலே தூக்கிச் சென்று இராமபிரானிடம் சேர்த்து விடுவதாக ஆவேசத்தோடு கூறுவதும் அது எம்பெருமான் ஆண்மைக்கு இழுக்காகும் என்று பிராட்டி மறுத்துரைத்தலும் வருகின்றன. சிதைநாயகனுக்குச்செய்திகூறும் போது அவள் கூற்றாக,

“வந்து எனைக் கரம்பற்றிய

வைகல் வாய் இந்த இப்பிறவிக்

கிருமாதரைச் சிந்தையாலும் தொடேனென்ற செவ்வரந் தந்த வார்த்தை திருச் செவிசாற்றுவாய்"

(சூளாமணி -34) வைகல்வாய் - நாளில், இருமாதரை-இரண்டாவதாக, வேறோர் பெண்ணை, சாற்றுவாய்- கூறுவாய்

என்று மிக நளினமாகக் கூறிவிடுவது பொருள் நுணுக்கம் பொதிந்தது. அனுமன் பிராட்டியாருக்குச் சில தேறுதல் மொழிகள் கூறகிறான். இறுதியாக அவள் கூறிய அடையாள் மொழிகளையும் கொடுத்த சூளாமணியையும் பெற்று மீள்கிறான். இவ்வளவும் கொண்ட இப்படலம் எண்பத்தொன்பது செய்யுட்களால் நிறைந்திருக்கின்றது.

'சூடையின்மணி கண்மணி ஒப்பது தொல் நாள் ஆடையின்கண் இருந்தது

பேரடையாளம் நாடிவந்தெனது இன்னுயிர்

நல்கிய நம்பி!