பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 106 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

           வல்லையின் அகலாவண்ணம்
              வானையும் வழியைமாற்றிக் 
           கொல்லவீர் குரங்கை நெய்திற்
              பற்றுதிர் கொணர்திர் என்றான்.
                                 (கிங்கரர் வதைப்படலம்) 

வல்லை - விரைவு, நொய்தின் - சீக்கிரமாக, பற்றுதிர் - பற்றுவீர்களாக

கிங்கரைப் பின்பற்றி வேறு பல வலிமையிற் சிறந்த அரக்கர்களும் சென்றனர். மலைகள் உருண்டு வருவனபோல அவர்கள் அனுமனை நோக்கி வந்தார்கள். அவர்கள் வருவதை அனுமனும் பார்த்தான். வானத்தை அணுகும் அளவு உயர்ந்த கைலாய மலையைப்போல நின்று கொண்டிருந்தான் ஒப்பற்ற தனி வீரனாகிய அவன். "யாருக்குத் தன்னுடைய வரவு தெரிய வேண்டுமென்று எண்ணினானோ அவனுக்கு அது தெரிந்து கிங்கரர்களைத் தன்னைப் பற்றி வருமாறு அனுப்பியும் இருக்கிறான்" என்று அறிந்தபோது அனுமனுக்கு மகிழ்ச்சியே உண்டாயிற்று. அரக்கர் நெருங்கினர். அனுமனும் எதிர்த்தான். போர் ஆரம்பமாயிற்று. எதிரே நின்று போரிடுபவர்களோ மலைமலையாக நிற்கும் அரக்கர்கள். அனுமனோ தனியன். இருப்பினும் மரங்களை வேருடன் பறித்து அதுகொண்டு எதிரிகளைச் சிதறஅடித்தான் அனுமன்.

     "படையிடை யொடிய
         நெடுந்தோள்
      பறிதாவயிறு திறந்தார்
         இடையிடை மலையில் விழுந்தார்
      இகல் பொர முடுகி எழுந்தார்" (29) 

இகல்-போர், பொர-போர்செய்ய, முடுகி-விரைந்து என்று அந்த நிகழ்ச்சியைப் போரின் ஆரவார வேகத்திற்கு ஏற்ற சந்தத்தோடு வர்ணிக்கிறான் கம்பன். இறுதியில் போருக்கு வந்தோரில் பலர் மடிந்தது போலவே கிங்கரர்களும் மடிந்தனர். அசோகவனத்தைக் காக்கும் காவல் வீரர் செய்தியைக் கூறுவதற்காக இராவணன் பாற் சென்றனர். அதைக் கேட்ட