பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9 &

(கடைஇய-செல்லுகின்ற, தகைப்பன-தடுப்பன, வறுஞ்கனை,

நீரில்லாச் சுனை புல்லு தழுவுதல் இறைஞ்சிய-தாழ்ந்த, அணி-அழகு, துணிபு-துணிந்து)

இக்காட்சியில் தோழி தலைவனைப் பிரிவு நீக்குதற்குக் கூறும். கானக்காட்சிகள்தலைவியின் நலங்கெடும் என்பதைக் குறிப்பாக உணர்த்தும் நயம் பெறத்தக்க இலக்கிய அமைப்புப் பெறுகிறது.

கொடுங்கோல் ஆட்சியில் நடுங்கும் குடிகள்

தோழி தலைவனுக்குப் பலவாறு கூறியும் தலைவன் பிரிவை நிறுத்துவதாகக் தெரியவில்லை. கடைசியாக ஒரு வழியைக் கையாண்டு பார்க்கிறாள். அந்த வழிதான் “நீ நீத்துப் பிரிந்தால் தலைவியின் நிலை என்னவாகும் என்பதற்கு அவள் கூறும் உவமைகள் "நீ பிரிந்தால் இவள் கொடுங்கோல் வேந்தனுடைய ஆட்சியில் நடுங்கும் குடிகளைப் போலத் துன்புறுவாள்." என்பது போன்ற பல மறுக்க முடியாத காரணங்களை உவமை மூலமாகக் கூறுகிறாள் தோழி. தோழியின் சொல்வன்மை அவற்றில் வெள்ளிடையாக விளங்குகிறது. தோழி கூறுகிறாள்:

"நீ பிரிவாயாயின், இவள் ஆள்பவர் துன்புறுத்த அல்லலுழுக்கும் நாடு போற் பாழ்பட்ட முகத்தோடு அளவற்ற வருத்தமெய்தி இருப்பாளோ? பலவகை ஒலிகள் தம்முள் கூடி ஒலிக்க, அதனால் கவின்பெற்று விளங்கும் திருநாள் முடிந்த பின்னர் அத்திருநாள் நிகழ்ந்த வறுங்களம் எத்தனைச் சூனிய அமைதி பெற்று விளங்குமோ, அப்படித் தனிமைகொண்டு இருப்பாளோ? ஒர்.இராப் பொழுதில் நீர்ப் பொய்கையிலிருந்து நீக்கப்பட்ட தாமரை மலரொன்று அவ்விரவு முழுவதும் வாடாது மறுநாள் முதல் வாடத் தொடங்கும்.

ஆனால் இவள் ஒர் இராப்பொழுதும் நின் பிரிவைப் பொறுத்து அமைய முடியாதவள். "ஆதலால் நீ நின் பிரிவைபொழிக" என்பது இதனுள் தோழி தலைவியின் பிரிவுத் துன்பத்திற்குக் கொடுங்கோல் ஆட்சியில் நடுங்கும் குடிகளை உவமை கூறுவது கேட்போர்க்குக் கருத்தை மறுக்க முடியாத அமைப்பைப் பெறுகிறது. இதைக்காட்டும் கலித்தொகை ஒவியக்காட்சி கீழே வருமாறு: