பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 108 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

பொன்றலின்-அழிவதால், மீன்கள் - நட்சத்திரங்கள். வேலை-கடல். பூ-உலகம்.

சம்புமாலியும் உடன் வந்த படைகளும் தயங்கி ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டனர். இராவணனின் கடுமையான கட்டளையை எண்ணிச் சம்புமாலி தன்னுடைய படைகளைப் போருக்கு ஏற்ப அணி, அணியாக வகுத்து நிறுத்தினான் அந்தப் படைவகுப்புக்கு ஏற்றாற் போல் அனுமனும் போருக்கு ஆயத்தமாகி நின்று கொண்டான். வில்லும், வேலும், வாளும் ஆகிய பற்பல ஆயுதங்கள் பல்வேறு திசைகளிலிருந்து அவன் உடலைக் குறிவைத்து ஏககாலத்தில் பாய்ந்து வந்தன. அனுமன் சினக்கொதிப்பு அடைந்தான். சினம் அவனுடைய செயலில் வெளியாயிற்று. அரக்க படைகள் சின்னாபின்னமாயின. கண்கள் தேனின் நிறம் போலச் சிவக்கும்படியாக எதிரில் வந்து நின்றான் சம்புமாலி. அப்போது அவனுடைய உருவம் கூற்றுவனுடைய உருவத்தை நினைவுபடுத்துவது போலக் கொடுமையாக விளங்கிற்று!

'தேனே புரைகண்கனலே

சொரியச் சீற்றம் செருக்கினான் தானே ஆனான் சம்புமாலி

காலன் தன்மையான்". (41) சம்புமாலியின் வளைந்த வில் இராமதுாதனின் மேல் அம்பு மழை பொழிந்தது. அடுத்தடுத்து வந்த அம்புகளின் தாக்குதலை "எழு" என்னும் தன் ஆயுதத்தால் தடுத்துக் கொண்டான் அனுமன். அந்த எழுவையும் கீழே விழச்செய்து விட்டான் சம்புமாலி. இறுதியில் வெகுளியின் உச்சநிலையை அடைந்த அனுமன் சம்புமாலியின் உயிரை தமனுலகு சேர்த்தான்.

ஐவரை வென்ற ஆற்றல்

சம்புமாவி கொல்லப்பட்டான் என்ற செய்தி கேட்டு இராவணன் வாளை உருவிக்கொண்டு தானே அரியணையிலி ருந்து எழுந்து விட்டான். அப்போது பக்கத்திலிருந்த சேனாதிபதியார் ஐவரும், "நாங்கள் சென்று அந்தக்குரங்கைப் பிடித்து வருகிறோம்" சிலந்தி தின்னும் சிறுவிலங்காகிய ஒரு குரங்கின் பொருட்டுத்தாங்கள் செல்வது தங்கள் பெருமைக்கும்