பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 110 கலித்தொகை பரிபாடல் காட்சிகள் சிருங்காரத்தில் மென்மையோடும் வீரத்தில் வன்மை அற்புதம் இவைகளோடும் கலந்து அழகு தோன்றுகிறது.

தளை அவிழ்ந்தது

போரில் தனக்குத் தோல்வியடைந்து அனுமன் பிரம்மா ஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டான் இந்திரஜித்து. அரக்கர் கூட்டம் அனுமனைச் சுற்றி வட்டமிட்டுச் சூழ்ந்து இகழத்தொடங்கியது. 'அனுமன் இலங்கை வீதிவழியாக இராவணன் மாளிகைக்குக் கொண்டு போகப்படுதல் வேண்டும்” என்று கட்டளை இட்டான் இராவணி குமரன் பல அரக்கர்கள் அவன் உடலை ப் பற்றியிருந்த நாகபாசத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர். வீதிதோறும் ஆடவர் பெண்டிர் அனைவரும் கூடிக்கூடி இந்தக் காட்சியைக் கண்டனர். இராமதுாதன் பலவாறு சிந்தித்துக் கொண்டே சென்றான். முன்சென்றவர் அனுமன் சிறைப்பட்ட செய்தியை இராவணனுக்குக் கூறி அவனளித்த பரிசில்களைப் பெற்றனர். இதற்குள் அனுமன் நாகபாசத்தினால் சிறைப்பட்ட செய்தி சீதாதேவிக்குத் திரிசடை மூலமாகத் தெரிந்தது. தனக்காக வந்ததனி வீரனுக்கு நேர்ந்த துயரை நினைந்து பிராட்டி வருந்தினாள். இந்திரஜித்து அனுமனை இராவணனுடைய பேரவையிற் கொண்டு போய் நிறுத்துகிறான். பிரம்மாண்டமான தோற்றத்துடன் விளங்கிய அவைக்குள்ளே வந்து நின்ற அனுமனைச் சீற்றம் பொங்க நோக்கினான் தென்னிலங்கை மன்னன்.

அப்படியே இராவணனைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாம் போலிருந்தது அனுமனுக்கு. பின் இடமும் காரியமும் கருதி அடக்கமுற்றான். அதன்பிறகு இராவணனுக்கும் அனுமனுக்கும் ஒரு நீண்ட காரசாரமான சம்வாதம் நிகழ்கிறது. விவாதத்தின் இடையே அளவுமீறிய ஆவேசத்தினால் அனுமனைக் கொலை செய்யுமாறு கூறிய இராவணனை விபீஷணன் சாந்தப்படுத்தித் தடுத்தான். இறுதியில் அனுமனின் வாலைத்தீயிட்டுக் கொளுத்தச் சொல்கிறான் இலங்கையர் வேந்தன். நாக பாசத்துடன் நெருப்பிடக் கூடாதென்று பாசத்தளையை எடுத்துக் கொள்கிறான் இந்திர சித்து.