பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 11 : அரக்கர்களின் வலிய கயிறுகள் அனுமனைப் பிணித்தன. கயிறு கட்டி அவனை வீதிதோறும் இழுத்துச் சென்று நெருப்பிடக் கருதியபோது அனுமன் அதை மீற முடிந்தவனாயிருந்தும் அடங்கிச் செல்லுகின்றான்.

"நொய்யபாசம் புரம்பிணிப்ப நோன்மை இலன்போல் உடல் நுணங்கி வெய்ய அரக்கர் புறத்தலைப்ப

விடும் உணர்ந்தே விரைவு

இல்லா ஐயன் விஞ்சை தனையறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை

யெனும் பொய்யை மெய்போல்

நடிக்கின்ற யோகிபோன்றான் போகின்றான்"

- (பிணிவிட்டுபடலம்-122) புரம்-உடல், நோன்மை வலி, வீடு- விடுதலை, நுணங்கி-கட்டுண்டு, விஞ்சை-ஞானம் என்று மற்று முணர்ந்த ஞானி முழு மூடனைனைப் போலடிப்பதென அனுமன் ஆற்றலையெல்லாம் அடக்கிக் கொண்டு செல்வதாகக் கம்பன் பேசுகிறான். வாலில் தீயிட்டனர். தீக்கொழுந்துகள் எழுந்தன. அடங்கிக்கிடந்த சொரூபத்தை ஆதாரத்தோடு வெளிக்காட்டி வானமுகட்டில் தாவி எழுந்தான் அனுமன். பிணித்திருந்த தளைகள் அவிழ்ந்து தரையில் சிதறி விழுந்தன.

எரிந்தது இலங்கை. வாலில் தீயோடு தளைகளை அவிழ்த்துச் சிதறியவாறே மேலெழுந்த அனுமன் இலங்கை நகரை அங்கியங்கடவுளுக்கு இரையாக்கக் கருதினான். -

தொல்லை வாலை மூலமறச்

சுட்டு நகரைச்