பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 12 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

இக்காட்சியில், துன்பங்கள் மிகுந்த கானகத்தில் தன் காதலனைத் தனியே அனுப்ப விரும்பாது தானும் உடன் சென்று துன்பங்கள் தொலைக்கும் இன்பத்துணையாகப் பயன் பட விரும்பும் ஒரு பெண்மை யுள்ளம் தோன்றக் காண்கிறோம். துன்பங்களைப் பகுத்துக்கொண்டு வாழும் காதல் இலக்கணமுந் தெரிகிறது.

பொல்லாப் பொருளும் நல்வோர் செயலும் இவ்வாறு தோழியும் தலைவியும் பலபடக் கூறித்தடுத்தும், தலைவன் மீண்டும் பிரிதல் விரும்பினனாகவே ஆயினான். அதைக் கண்ட தோழி எந்தச் செல்வத்தைத் தலைவன் தேடிச் செல்கிறானோ அதனது நிலைமையைக் கூறித் தலைவியோடு உடன் போக்காகச் செல்லும் செலவே இன்பம் தரத்தக்கது என்று அவன் செலவை நிறுத்திவிடக் கூறுகிறாள். அங்கனம் கூறுகின்ற தோழி பொல்லாப் பொருளின் இயல்பையும் அதைப் பொறுத்தவரை நல்லோர் நடந்துகொள்ளும் முறைமையையும் உலகியல் தோன்ற எடுத்து விளக்குகிறாள்- இதோ தோழியின் கூற்றுத் தரும் காட்சி ; - தலைவனே! தான் பொருத்தி மனதாற் கொண்ட மனிதர்களைத் தான் பிரியுங்காலத்துப் பிறரெல்லாம் இகழும்படி அவர்தம் மனவலி இழக்கும்படி அவர்களை நீங்கும் பொருளினுங் காட்டில் நிலை பேறில்லாத பொருள்களை நல்லோர் விரும்புவாரோ? விரும்பமாட்டார்கள் காண்.

தமக்குப் பெருமை பெருகும்படியாகத் தாம் பெறுகின்ற பயனைப் பாராதே அரசர் தமது ஆக்கத்தை முயன்றும் அமைச்சரைக் கோபிக்கும் நேரத்தில், நமது காரியத்தை செய்தவரென்ற கண்ணோட்டமு மின்றி அ.ெ ரிது! பொருளையன்றி உயிரையும் கொள்ளும் அரசினும் காட்டில் நிலை பேறில்லாத செல்வத்தை அறிவுடையோர் விரும்புவார்களோ? விரும்பார்காண் ஆகையால் நீ இப்பிரிவை விரும்புதல் கூடாது, விரும்பின் தலைவியுடன் உடன் போக்கை விரும்புக

"மரிஇத்தாம் கொண்டாரைக்

கொண்டக்காற் போலாது