பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல் நாடகம்

தலைவனுக்கும் தலைவிக்கும் காதலுண்மையைத் தோழி தலைவியை நாடி அறிந்து கொள்ள அவர்கள் நடத்திய காதல். நாடகத்தை தான் நடத்தியதுபோலக் கூறுகிறாள். அந்த நாடகத்தில் அவர்கள் சந்திப்பிலே தோன்றும் முதற்காதல் அழகிய முறையில் முகிழ்ப்பதை அறிய முடிகிறது. தோழி கூறுகிறாள்! "தினைப்புனங்களில் கிளிகள் வாரா வண்ணம் யான் காத்து வருங்கால், தினைப்புனத்தின் பக்கத்திலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்ட ஊசலில் ஒரு நாள் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கோர் இளைஞன் வந்தான். நான் அவனை "நீ இவ்வூசலைச் சிறிது ஆட்டுவாயாக" என்றேன். அவனும் அதற்கு உடன்பட்டு, "பெண்னே! நீ கூறியது நன்று", என்று கூறி என் ஊசலை ஆட்டினான். அவன் ஆட்டும் போது, அவன் மார்பில் கை நெகிழ்ந்து யான் வீழ்ந்தேன்.

நான் பொய்யாக வீழ்ந்ததை அவ்விளைஞன் உண்மையாகக் கருதி, உடனே என்னை விரைய எடுத்துத் தழுவிக்கொண்டான். அவனுடைய தழுவலிலே யான் மயங்கியிருக்க, "நீ போவாயாக" என்று கூறி அவ்விளைஞன் என்னை விடுவித்தனன் அவன் போனபின் நான் மெய் மறந்து நின்றேன். என்று தோழி தலைவி செய்த செயல்களைத் தான் செய்ததுபோலக் கூறி உண்மையை நாடுகிறாள். ஊஞ்சலாடும் போது, பொய்யாக விழுந்து காதலனை அடைந்தது தலைவியின் காதல் நாடகந்தானே? நடிப்பது நாடகம். தலைவியின் காதல் நடிப்பே இங்கே நாடகம்.

"ஏனல் இனக்கிளி
யாங்கடித்து ஒம்பும்
புனத்தயல் ஊச லூர்ந்தாட
ஒரு ஞான்று
வந்தானை ஐய! சிறி தென்னை
யூக்கி எனக்கூறத்
தையால் நன்று என்றவ
னுக்கக் கை நெகிழ்பு