பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 25 ふ

கைத் தொழில்வல்ல ஒருவனாற் செய்யப்பட்ட பாவையே அன்றி வேறொரு நாட்டு மனிதனாலே அழகிய உறுப்புக்களெல்லாம் கூட்டி இயற்றப்பட்ட சுதையுருவோ? அன்றி, உயிர் கொன்று கொன்று அத்தொழிலில் வெறுப்புற்ற கூற்றுவன் கொண்ட வேற்றுருவ மோ? பளபள வென்று மின்னிப்பொலியும் மேகலையும் பூங்கலிக்கத்தையும் அணிந்த இவள் பிள்ளை இல்லாது வெகுகாலம் வருந்தினவர்க்ளுக்குப் பிறந்த ஒற்றைத் தனிச்செல்லப் பெண்ணோ? இவளுடைய பெற்றோர்கள் இவளைக் காவல் செய்யாது புறம் விடுதல் என்போன்றார். துன்புறுதற்கு ஏதுவாகும்" என்று கைக்கிளை பேசுகிறான் அவ்விளைஞன். பெண்மையின் அழகைக் கண்டு ஆண்மை ரசிக்கும் முறையை இக்காட்சியுள் காணமுடிகிறது.

"ஊர்காவல் நிவந்த

பொதும் பருள் நீர்க்கால் கொழுநிழல் ஞாழல்

முதிர் இனர் கொண்டு கழும முடித்துக்

கண் கூடு கூழை கவன் மிசைத்தாதொடு

தாழஅகன்மதி தீங்கதிர் விட்டது

போலமுகனமர்ந் தீங்கே வாருவாள் இவள்யார்

கொல் ஆங்கே ஒர் வல்லவன் தைஇய

பாவை கொல்நல்லார் உருப்பெல்லாங் கொண்டியற்

றியாள் கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர்

கூற்றங் கொல் ஆண்டார் கடிதிவளைக் காவா

விடுதல்கொடியியற் பல்கலைச் சில்பூஇ

கலிங்கத்தள் ஈங்கிதோர்