பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

2

6

கலித்தொகை பரிபாடல். காட்சிகள் நல்கூர்ந்தார்

செல்வமகள்"

(குறிஞ்சிக்கலி)

பொதும்பர்-சோலை; நீர்க்கால்-நீரோடும் வாய்க்கால்; ஞாழல்-புன்னை: பூங்கொத்து, கழுமமுடித்து-வாரிமுடிந்து, கூழை - கூந் த ல் , சுவ ன் மின் ச - தோள்க ளின் மேலே : தைஇய-இயற்றிய கூற்றம்-யமன் ஆண்டார். பெற்றோர்; கலைமேகலை, கலிங்கம் -துகில் நல்கூர்ந்தார் - பிள்ளையில்லாதார்

இக்காட்சியில் சோலை நடுவில் ஒர் சுடர்க்கொடியைக் கானும் ஆடவனுடைய முதற்காதலின் மனவெழுச்சி கண்டதைப்பற்றி வருணித்துப் பேசும் பேச்சுமூலம் நமக்குத் தெளிவாக விளங்குகிறது.

நினைத்ததும் நடப்பதும் மருதக்கலி

"பிரிந்து சென்ற தலைவன் வந்தால் அவனோடு ஊடவேண்டும் என்று உறுதி செய்து கொள்கிறான் தலைவி. அவன் வந்தால் பிணங்காமல் முகங்கொடுத்துப் பேசுதல் கூடாது என்றும் முடிவுசெய்து கொள்ளுகிறாள். இது தலைவன் வருவதற்கு முன்பு அவள் நினைத்தது. எந்தச் செயலையும் விரைவாகத் தொடங்கி மெதுவாக முடிப்பது பெண்மையின் இயல்புகளுள் ஒன்று. தலைவன் வந்தான். தலைவி அவனைக் கண்டாள். ஐந்து புலன்களும் கண்களே ஆகிக் கண்டாள். தன்னை மறந்தாள். தன் உறுதியை மறந்தாள். ஒடிச்சென்று தலைவனைத் தழுவிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவள் நெஞ்சில் முகிழ்த்தது.

ஊடவேண்டும்-பிணங்க வேண்டும் என்ற உறுதிகள் எங்கோ ஒடிப்போயின போலும். மறுநாள் தனியாக இருக்கின்றாள் தலைவி. முதல்நாள் வந்திருந்த தலைவன் மீண்டும் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவிக்கு இப்போதுதான் தன்னுடைய உறுதிகள் நினைவுக்கு வருகின்றன."நினைத்த எண்ணத்தை