பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29 & இருக்கவேண்டுமென்று கனவு காண்கின்ற எங்களுக்கு "உனது ஆண்டுக்கொரு முறையாகிய வரவு நீல்வான் நோக்கி நீர் நீர் என்று ஏங்கி நிற்கும் கதிர்கள் வாடக்கூடிய நெல்லிற்கு நிறையாத ஒரு துளி நீரை வானம் கொடுத்ததுபோல் இருக்கிறது. நீரே காணாது வறண்டு நீலவான் நோக்கி நிற்கும் நெற்கதிர்க்கு ஒரு துளிநீர் போதுமா? நின்முகமே காணாது வருத்தி நிற்கும் எமக்கு "நினது ஆண்டுக்கொரு முறையாகிய வரவு போதுமா? வாழ்கின்றவர்களுக்கு வானம் எப்படியோ, அப்படித்தான் பெண்களுக்குக் காதலரும். வானம் பொய்யாத வளமழை பொழிந்தால் வாழ்கின்றவர்கள் வாழ்வு செழிப்புற்றோங்கும். வானம் பொய்த்து விட்டால் வாழ்வு பாழ்பட்டு வறண்டு போகும். காதலர் இன்பம் நல்கினால்தான் பெண்மையின் வாழ்வு செழிப்புற முடியும். காதலர் பிரிந்து சென்றுவிட்டால் பெண்மையின் வாழ்வு வறண்டு போகும்.

"வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி" (திருக்குறள்) வீழ்வார்க்கு - காதற் பெண்களுக்கு வீழ்வார்-காதலர் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். -

"நீ வருநாட்போல்

அமைகுவம் யாம் புக்கியோ மாரிக்கு அவாவுற்றுப்

பீள்வாடு நெல்லிற்கு ஆங்கு ஆராத் துவலை

யளித்தது போலும் நீ ஒர் யாண்டு

ஒருகால் வரவு'

(கலித்தொகை : மருதம்)

(அமைகுவம் - திருப்தியடைவோம் ; புக்கு ஈமோ - சென்று கொடுங்கள் : மாரிக்கு - மழைக்கு அவாவுற்று - ஆசைப்பட்டு: பிள்வாடு நெல்-கதிர்கள் உலரும் நெல் ஆராத்துவலை நிறையாத ஒரு துளி மழை, யாண்டு வருடம்) -