பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 30 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

இன்பம் என்பது, வையத்து மக்களுக்கு வானமழைபோலக் காதலர்களுக்கு அமையும் நுகர்ச்சி என்பதை இதில் தலைவியின் பேச்சு நமக்கு விளங்குகிறது. அவ்வின்பம் இல்லாவிடிலோ அன்றிக் குறைந்தாலோ காதலர் வாழ்வு வறண்டு போகிறது என்பதையும் தலைவி நயமாகக் கூறுகிறாள்.

வவிய வர்த்திய மென்மலர்

"பிறமகளிரிடத்துச் சென்று இன்பம் நுகர்தலால் பலரும் கண்டு வியக்கத்தக்க சிறுமைகள் எல்லாம் உனக்கு அமைந்தது. உன்னை விரும்புகின்றவர்களும் உன்னால் விரும்பப் படுகின்றவர்களும் ஆகிய பிறமகளிரும் உன்னை வெறுத்து விருப்பொழியும் படியாக இங்கே எம்மகத்தில் நில்லாதே. அவர் அகத்திற்கு உடனே செல்வாயாக, தன் இயல்பில் மலராது ஒருவரது கையினால் வலிய மலர்த்துதலினால் மொட்டு அலர்ந்தாற் போல; உன்னுடைய இனிமையும் மன ஈடுபாடுமில்லாத தழுவுதலைப் பெறுங்காலத்து குளிர்ந்த இப்பனிக் காலம் எமக்குக் கொடியதாகிய ஒன்றாயிருக்கிறது. இது தலைவி தலைவனிடத்துத் தனது பிணக்குத் தீருமுகத்திற் கூறியது.

பனிக்காலத்திற்கும் தலைவனது மனத்தொடு பயிலாத போலிக் காதலுக்கும் வலியமலர்ந்த மலர் உவமையாகின்றது. வலி ய மலர்த்துகின்ற கைகள் தலைவனுடைய செயலுக்கு நேரே உவமையாக அமைகின்றன. இயல்பாக மலருங் காலமின்மை, காலத்தியைபு இல்லாத பனிக்காலத்திற்கு உவமையாக அமைகிறது. ஒருவினையைப் பிறிதோர் வினையோடு உவமிக்குங்கால் யாதனும் ஒரொப்புமை கருதி உவமித்தல் மரபு. ஆனால் பல ஒப்புமை அமையும்படி உவமித்தல் மரபிற்கும் மேற்பட்ட சிறப்பான நயம். அந்த நயம் இங்கே அமையும்படி செய்திருக்கிறாள் தலைவி.

மலரும் பருவத்திலுள்ள ஒரு மொட்டும், அதை வலியப் பிடித்து இழுத்து அலர்த்தும் இருக்ைகளும் தலைவனும் தலைவியும் நம் மனக்கண் முன் சித்திரமாக விரிகின்றனர் இக்கலி த்தொகை மருதக் காட்சியில், -