பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 37 to நடிக்கும் இந்தப் போலி நாண நாடகத்தை அவன் முன்னே

சென்று நடிப்பது ஒரு அரிய செயலா? என்று தோழி தலைவனுக்கு உதவியாக வேண்டுகிறாள்.

"பூக்குழாய் செல்வம்

அவனுழைக் கூஉய்க்கூய் விரும்பியான் விட்டேனும்

போல்வல் என்றோன்மேல். கரும் பெழுது தொய்யிற்குச்

செவ்வில் ஈங்காக இருந்தாயே

எங்றாங்கு இற அவன்நின் திருந்தடி

மேல் வீழ்ந்து இரக்கும் நோய்தீர்க்கும் மருந்து -

நீயாகுதலான் நின்னொரு.சூழங்கால்

நீயும் நிலங்கிளையா வென்னோடு நிற்றல்

எளிதன்றோ மற்றவன் தன்னோடு நின்று விடு"

(செல்லல்-செவ்வாயாக, அவனுழை-அவனிடத்து, கூஉய்க்கூய்-அழைத்தழைத்து, தொய்யில்-தோள்மேல் எழுதுவது, இற-போ,சூழங்கால்-ஆராயுங்கால், கிளையா-கிளைத்து, என்னோடு-தோழியொடு)

(செய்யுள் தோழி கூற்று) இதனுள் தோழி மிகச் சாமர்த்தியமான முறையில் தலைவனுக்கு உதவிசெய்கிறாள் என்பது அவள் பேச்சிலிருந்தே வெளிப்படுகிறது.

தலைவியின் தியாகம்

தோழியின் உதவியால் தலைவன் தலைவியை எளிதில் எய்திவிடுகிறான். இப்போதெல்லாம் அவனுக்கும் அவளுக்கும்