பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 40 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

இல்வயிற் போகாது கொடுந் தொழுவின் உட்பட்ட

கன்றிற் குச் சுழுங் கடுஞ்சூலாம் நாகுபோல்

நிற்கண்டுநாளும் நடுங்களுர் உற்றதென் நெஞ்சு

(கலித்தொகை : முல்லை) (அசைவு-துன்பம், போதந்து-சென்று, நிச்சயம்-நாள்தோறும், மத்தம்-தயிர் கடையும் மத்து, பிணித்த-கட்டிய, இல்வயின்-வீட்டிற்கு, கொடுந்தொழு-வளைந்ததொழு, கடுஞ்சூல்-துன்பநிறைந்த முதற்கரு, நாகு-இளம்பசு, அளுர் - துன்பமிகுதி)

உளநிலையை வெளிப்படுத்த அமைகின்ற வாய்ப்புக்களுள் ஏமாற்றம் தலைசிறந்தது. ஏமாற்றத்தில் ஒருவன் பேசும் சொற்கள் உண்மையாக அவனுடைய உள்ளத்திலிருந்து வெடித்து வெடித்துச் தெறித்துவரும். அந்தச் சொற்களில் ஏதோ மறைவான ஆற்றல் தோற்றும். சுழலும் மத்தில் அங்கும் இங்கும் இழுபடும் கயிறு போலவும், முதற் கருவுற்ற பசுவின் கன்றுகாக்கும் நீங்காப் பேரவாப் போலவும் அவனது நெஞ்சு அவளைப் பற்றிச் சுழலுகிறது. அவள் மறுக்கும்போது அவளுடைய சொற்களில் ஏமாற்றம் உருப்பெறுகிறது.

காதல் தேர்வு

கட்டுக்குலையாத உடலமைப்புப் பெற்ற காளை அவன். பொன்னை உருக்கி உறுப்புக்களை வார்த்தாற் போன்ற சின்னஞ்சிறு கன்னிப் பருவத்துக் குமரி அவள். அவன் அவளை விரும்பினான். அழியாக் காதல் கொண்டான். அவளுக்கும் அவன்மேற் காதல் உண்டு. ஆனால் பெண்மைக்கேயுரிய அச்சம் அதனை வெளித் தெரியாதவாறு மறைத்து விடுகின்றது.அவன் அவள் பெற்றோர்களை அணுகுகிறான்.செய்தியைக் கூறுகிறான். அவர்கள் அவனுடைய காதலுக்கு ஒரு தேர்வு நடத்துவோம் என்கிறார்கள். அந்தத் தேர்வில் அவன் மட்டுமில்லை அவனை ஒத்த இளைஞர்கள் யாவரும் கலந்துகொள்ளலாம் என்றும்