பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 42 கலித்தொகை பரிபாடல்.காட்சிகள்

வெளிப்படுத்தியாவது காதலை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென்ற இளைஞனின் உள்ளத்தையும், அப்படியாயின் அவ்விளைஞருக் கெல்லாம் எம் மகளைப் பெறும் வாய்ப்பான ஏறுதழுவு விழாவாகிய காதல் தேர்வு விரைவில் நடக்கும் என்று அறிவிக்கும் பெற்றோர் திறமும் காட்சிகளாக விரிகின்றன.

மோர் விற்கும் மெல்லியல்

தெருவில் கைகளை அழகாக வீசிக்கொண்டு தலையில் சுமந்த மோர் பானையோடு நாள்தோறும் மோர் விற்க வருவாள் ஒரு குமரிப் பெண் காதல், இடம் பொருள் தகுதியைப் பார்த்தா தோன்றுகிறது? அதற்கு அழகும் இளமையும் பருவமுந்தானே குறி, ஒரு இளைஞனுக்கு அந்த மேர்ர் விற்கும் மெல்லியலின் மேல் அளவு கடந்த காதல் ஏற்பட்டுவிடுகிறது. காதல் வேகத்தில் அவளை அவன் கண்டவாறு வருணிக்கத் தொடங்கி விடுகிறான். இப்பொழுது அவளைச் சற்று இங்கே அழைத்துப் பேசச் சொல்லிக் கேட்போம். "இளமை கொழு கொழுத்து வளர்ந்த மேனியுடன் இறுமாந்து தலையில் மோர்ப்பானையுடனே தனது பேரழகால் துடிதுடிக்கும் இளமையால், வனப்பு முழுதும் பற்றி வளர்ந்தவளரிங் கொடியாய்ப் பேரூர்களின் தெருவிலும் சிற்றுார்களிலும் தன்னைத் கண்டவுடன் ஊர் இளைஞர் குழாத்துள்ளே ஆரவாரத்தை உண்டாக்குபவளைப் போல மோரோடு வந்த மெல்லியலின் பாரப் பேரழகை என் நெஞ்சே நீ காண்பாயாக. இம்மோர் விற்கும் மெல்லியலின் வனப்புக்கு ஈடு சொல்ல உலகத்து மகளிரெல்லாம் ஒப்பே இல்லாதவர்கள். இவள் வனப்பிற்கு இவளே ஒப்பு. இவளுடைய மோர்ச்சுமை அழகிற்குப் பொருந்தியதில்லை. இவள் மோர்சுமந்து தன்தோளை வீசி கூந்தலிலுள்ள வட்டிலை ஒருகையால் தழுவிக் காதில் தொங்கும் குண்டலங்கள் ஊசலாட வருகின்ற தன்மையை உடையவள்.

"மதை இனள் பேரூருஞ்

சிற்றுாருங் கெளவை

எடுப்பவள்போல்

மோரோடு வந்தாள்

தகைகண்டை -