பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o 44 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

மெய்த்துணிவும் உள்ள ஒரு ஆடவனை அம்முறையிலேதான் தேர்ந்தெடுக்க முடியும், என்று அவர் கருதுகிறார். தேர்வு வைக்கிறார். நான் முன்பு நீ முன்பு என்று அவள் எழிலைக் கண்டு கண்டு நெஞ்சம் பறி கொடுத்திருந்த சிற்றிளைஞர்கள் குவிந்தனர்.

கொழுகொழுவென்று வளர்ந்த திமிலும் குத்தி வயிற்றைக் கிழிக்கும்படி சீவிய கொம்புமாக ஓடிவருகிறது காளை, உயிரை ஒரு பொருட்டாக மதியாது பாய்ந்து பற்ற முயல்கின்றனர் இளைஞர். மனம் பேதலித்துத் திரும்புவார் சிலர். முட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதப்பார் சிலர். இறுதியில் தகுதியுள்ள ஒரிளைஞன் காளையை அடக்கிப் பிடித்தான். வெற்றி கிடைத்தது. குறிப்பிட்ட தேர்வு நிகழ்ந்த இடத்திற்கு அந்தப்பெண்ணும் வந்திருந்தாள். வென்ற இளைஞன் வெற்றிச் செருக்கால் அவளை அப்படியே விழுங்கித் தீர்த்து விடுபவன் போல நோக்கினான்.

அது கண்ட அந்தபெண் அவனது செருக்கை இகழ்ந்து தன் தோழியிடம் கூறுகின்றாள் :- தொழிலில் திறம் வல்லதோழி இந்த ஆயர் மகன், நமது சுற்றத்தோடே நாம் குரவைக் கூத்தாடும்போது நம்மை இல்லையாகச் செய்திடுவான் போல நோக்கி நமக்கு வருத்தத்தைத் தரும் நோயைச் செய்தல், செந்நிறம் பொருந்திய கண்களையுடைய காளையைக்கொண்டு அடக்கினேன் என்னும் வெற்றிச் செருக்கினாலன்றோ? வேறொன்றினாலுமில்லை. -

"தொழிலி இஇ ஒருக்குநாம்

ஆடுங் குரவையுள் நம்மை அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய்

செய்தல் குருக்கண் கொலையேறு கொண்டேன்

யான் என்னுந் திருக்கன்றோ ஆயர்மகன்"

(கலித்தொகை : முல்லை)