பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 48 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

கூந்தலுட் பெய்து முடித் தேன்மன் தோழியாய் வெள்நெய் உரைஇ

விரித்த கதுப்போடே அன்னையும் அத்தனும்

இல்லராய் ஆய்நான அன்னை முன் வீழ்ந்தன்று

لیا ل9ILے அதனை வினவலுஞ் செய்யாள்

சினவலுஞ் செய்யாள் நெருப்புக் கை தொட்டவர்

போல விதிர்த்திட்டு நீங்கிப் புறங்கடைப்

போயினாள் யானும் என் சாந்துளர் கூழை முடியா

நிலந்தாழ்ந்த பூங்கரை நீலந்தழி இத்

தளர்பு ஒல்கிப் பாங்கருங் கானத்து

ஒளித்தேன்

(கவித்தொகை : முல்லை)

(கரந்தது - மறைத்தது, கோட்படுதல்-பிடிபடுதல், புல்லி னம்-ஆடு, காழ்-மலர் ஆரம், கண்ணிமாலை, மெல்லியால் - மெல்லிய இயல்பினாய், வெள்நெய்-கூந்தலுக்குப் பூசும்தைலம், உரைஇ-தடவி, கதுப்பு-கூந்தல், அத்தன்-தந்தை, இல்லர்-வீட்டின்கண்உள்ளார். ஆய்-தாய், வீழ்ந்தன்று-வீழ்ந்தது, கூழை-விரித்த கூந்தல், முடியா-முடித்து, பூங்கரை-பூவரைந்த கரைகளையுடைய, நீலம்-நீலக்சிற்றாடை, தளர்பொல்கி - தளர்ந்து ஒடுங்கி) -

குற்றமுள்ள நெஞ்சின் மெய்ப்பாட்டை அருமையாக வரைந்து காட்டுகிறது. இந்த எழில்நிறைந்த முல்லைத் திணைக்காட்சி.